சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாகை அருகே கிராமத்தை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 13 பேர்.. கலெக்டருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: நாகை மாவட்டத்தில் மீனவ கிராமத்தை சேர்ந்த 13 பேரை, ஊரை விட்டு விலக்கி வைத்ததை எதிர்த்த மனுவுக்கு தமிழக அரசு, நாகை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில், மீன் விற்பனை செய்வது தொடர்பாக நம்பியார் நகர் மற்றும் அக்கரைபேட்டை மீனவ கிராமங்களுக்கு இடையில் மோதல் இருந்து வந்தது.

high court notice to naagai district collector over 13 people Exclusion from village

இந்த விவகாரம் தொடர்பாக, அமைதி பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் மற்றும் வருவாய் மண்டல அதிகாரி நாகை மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரை சேர்ந்த பாரி உள்ளிட்ட 13 பேருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மீனவ கிராமங்களை சேர்ந்த கட்டபஞ்சாயத்துகாரர்கள், 13 பேரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தும், அவர்களது வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது எனவும், அவர்களுடன் மீன்பிடிக்க யாரும் உதவியாக செல்லகூடாது என்றும் அவ்வாறு செல்லும்பட்சத்தில் அவரகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கபடும் என உத்தரவிட்டிருந்தார்.

நமக்கு தெரியாமல் அவர் எப்படி அங்கு சென்றார்... தமிழக பாஜகவில் நடைபெறும் விவாதம் நமக்கு தெரியாமல் அவர் எப்படி அங்கு சென்றார்... தமிழக பாஜகவில் நடைபெறும் விவாதம்

நாகை மாவட்ட துறைமுகத்தில் மீன் பிடிப்பதற்கு முழு உரிமை உள்ளதால் ஊரை விட்டு விலக்கி வைக்க தடை விதிக்க வேண்டும் என பாரி உள்பட 13 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு தமிழக அரசு மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

English summary
madras high court notice to naagai district collector over some village people of naagai Exclusion from village and business
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X