சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சட்ட விரோத கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய சகாயம் ஐ ஏ எஸ் அதிகாரிக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.

High Court orders police to provide security to IAS officer sagayam

அதன்படி மதுரையில் சட்டவிரோத கிரானைட் குவாரி தொடர்பாக விசாரணை நடத்திய சகாயம் தனது அறிக்கையில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, விசாரணை ஆணையர் பொறுப்பில் இருந்து சகாயம் விடுவிக்கப்பட்டார். அதேவேளையில், சகாயத்திற்கு பாதுகாப்பு வழங்கும்படி கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

முகமெல்லாம் காயம்.. வழியும் ரத்தம்.. நெஞ்சை பிசைந்தெடுக்கும் விவசாயியின் போட்டோ.. குலுங்கும் டெல்லி!முகமெல்லாம் காயம்.. வழியும் ரத்தம்.. நெஞ்சை பிசைந்தெடுக்கும் விவசாயியின் போட்டோ.. குலுங்கும் டெல்லி!

இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் ஜெயச்சந்திரன் அடங்கி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி சகாயத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடந்த 2018ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணையில் பங்கேற்ற தற்போதைய அதிகாரிகளுக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த நீதிமன்ற விசாரணைக்கு அவர்கள் உதவி தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

English summary
Madras High Court orders police to provide security to IAS officer sagayam who was investigating illegal granite quarries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X