சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமணமானவர்கள் இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால் கடும் தண்டனை - ஹைகோர்ட்

திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோகும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

High Court punishes married man for cheating on young women

காணாமல் போன 10ம் வகுப்பு மாணவியை மீட்டுத் தரக் கோரி, அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொளி காட்சி மூலம், மாணவியை ஆஜர்படுத்திய காவல்துறையினர், மாணவி ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கு பணியாற்றிய ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

அதிமுகவின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் விசாரிக்க உத்தரவிடக்கோரி ஹைகோர்ட்டில் வழக்குஅதிமுகவின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் விசாரிக்க உத்தரவிடக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு

அப்போது நீதிபதிகள், பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோய் திருமணமான ஆண்களை மணந்து கொள்ளும் இளம்பெண்கள் துன்புறுத்தப்படுவதை காணமுடிகிறது என வேதனை தெரிவித்தனர்.

திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெற்றோர் சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடிபோகும் இளம்பெண்கள் திருமணமானவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக அடுத்த வாரம் பதிலளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

English summary
Judges said those who cheat on young women by hiding their marriage should be severely punished. How many cases have been registered so far of teenagers marrying married people who run away from home without parental consent, and how many people have been arrested for cheating on teenagers by hiding their marriage?Judges asked to Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X