சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெற உத்தரவிட முடியாது - ஹைகோர்ட்

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், ஓட்டுக்கு பணம் பெற வில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரியா பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

Google Oneindia Tamil News

சென்னை: ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்களிக்க வரும் அனைத்து வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம் பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

High Court says Voters cannot be ordered to take oath of office as they did not pay for the vote

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், ஓட்டுக்கு பணம் பெற வில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரியா பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்பதால், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அது நீதிமன்றத்தின் பணியல்ல எனவும், இதுசம்பந்தமாக மனுதாரர் அரசை அணுகலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

English summary
The Chennai High Court has said that the Election Commission cannot be ordered to take the oath of allegiance to all voters who come to vote as they have not paid for the vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X