சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய தாமாக முன்வந்து ஹைகோர்ட் வழக்கு.. செங்கல்பட்டு ஆட்சியருக்கு வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜனவரி 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மாமல்லபுரத்தை நிரந்தரமாக பாதுகாக்க கோரி நவம்பர் 1ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார்.

High Court sumo-to case to beautify Mamallapuram: Notice to the Collector of Chengalpattu

அதில், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு மற்றும் வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவற்றில் லைட்டிங் ஷோ-விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; புராதன சின்னங்களை மறைக்கும் வகையில் கட்டிடங்களை அனுமதிக்க கூடாது; குப்பை போடுவதை குற்றமாக்கி குறைந்த பட்சம் ஆயிரம் அபராதம் வசூலிக்க வேண்டும்; சீன அதிபர் வருகையின் போது அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியிருந்தார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து பொது நல வழக்காக விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, நீதிபதி கிருபாகரன் அளித்த பரிந்துரைகள் தொடர்பான நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

அதனை ஏற்று வழக்கை ஜனவரி 2ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தியுள்ளனர்.

English summary
madras High Court file suo moto case to beautify Mamallapuram: Chengalpattu district collector should filled details statement before january 2 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X