சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2021-க்குள் உயர் மின்கம்பிகள், புதைவடங்களாக மாற்றப்படும்... அமைச்சர் தங்கமணி தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: 2021ஆம் ஆண்டுக்குள், சென்னையில் 6,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைவட கம்பிகள் பொறுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் உயர் மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றும் பணிகளை இந்த ஆண்டுக்குள் அரசு செயல்படுத்துமா என, பேரவையில் கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

High wires will be turned into fossils in chennai Says Minister Thangamani

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, சென்னை மாநகரில் 6 ஆயிரத்து 532 கிலோமீட்டர் அளவுக்கு உயர் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படவுள்ளதாகவும், 2 ஆயிரத்து 567 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை மாநகர் 8 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இதேபோல, பல்லாவரம் பகுதியில் உயர் மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என திமுக உறுப்பினர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர், தாம்பரம் கோட்டத்துக்குட்பட்ட பல்லாவரம் தொகுதியில் 102 கிலோமீட்டர் அளவுக்கு மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்ற டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

7 பேர் விடுதலை.. ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி வழக்கு.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு 7 பேர் விடுதலை.. ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி வழக்கு.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு

இதனிடையே, தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் (அ) அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன், தொழில் முதலீடுசெய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ரூ.1 கோடியில் வலைதளம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

English summary
Minister Thangamani has said that fossil wires will cover 6,000 kilometers in Chennai by 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X