சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய பாடத்திட்டம் ரத்து... தமிழக அரசு அறிவிப்பு... மு.க.ஸ்டாலின் வரவேற்பு

Google Oneindia Tamil News

சென்னை: 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

தமிழகம் முழுவதும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4 பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்த நிலையில் அதனை மூன்றாக மாற்றியது பள்ளிக்கல்வித்துறை. இந்நிலையில் பழைய நடைமுறையே தொடரவேண்டும் என்றும், புதிய பாடத்திட்ட முறையில் குளறுபடிகள் உள்ளதாகவும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன.

higher secondary new syllabus cancellation, mk stalin welcome this decision

புதிய பாடத்திட்டத்தின் படி பொறியியல் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் தமிழ், ஆங்கிலம் என மொழிப்பாடங்களை படிக்கலாம். இதேபோல் மருத்துவம் படிக்க விருப்பப்படும் மாணவர்கள் வேதியியல், இயற்பியல், உயிரியல் பாடங்களுடன் மொழிப்பாடங்கள் இரண்டை படிக்கலாம். இது மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது என்பதால் இதில் அவசரம் வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், புதிய பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய பாடத்திட்ட முறை தொடரும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் கொரோனாவால் பலி.. மு.க ஸ்டாலின் இரங்கல்! செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி தலைமை மருத்துவர் கொரோனாவால் பலி.. மு.க ஸ்டாலின் இரங்கல்!

''குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது! இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா? சரியான 'வாபஸ்' பழனிசாமி'' என விமர்சித்துள்ளார்.

English summary
higher secondary new syllabus cancellation, mk stalin welcome this decision
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X