சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினின் குமுறல்.. துரைமுருகனின் டச்சிங்.. வடிவேலு சர்பிரைஸ்.. கலகல கருணாநிதி சிலை திறப்பு

கருணாநிதி சிலை திறப்பு விழாவின் முக்கிய சிறப்பம்சங்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா!

    சென்னை: செல்போனில் வீடியோ எடுத்த ராகுல்... துரைமுருகனின் கலக்கல் கலாய், தந்தையை இழந்த தனயனின் குமுறல்... வடிவேலுவின் சர்ப்ரைஸ் என்ட்ரி என பல்வேறு அம்சங்களுடன் அதகளப்படுத்தி முடிந்திருக்கிறது சிலை திறப்பு விழா.

    கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்த பின்னர் அனைவரும் கிளம்பினர். அப்போது ராகுல், தன்னிடமிருந்த செல்போனை எடுத்து கருணாநிதியின் சிலையை போட்டோ எடுத்ததே கொள்ளை அழகுதான்.

    கட்சியின் தலைவரை இழந்து தவிக்கிறோம் என்பதைவிட அப்பாவை இழந்த மகனின் தவிப்பே ஸ்டாலினின் பேச்சில் வெளிப்பட்டது.

    எங்கே இருக்கிறீர்கள்?

    எங்கே இருக்கிறீர்கள்?

    "தலைவரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? "நீங்கள் எங்கும் போகவில்லை. போகவும் மாட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு இங்குதான் இருக்கிறீர்கள்.

    தனயனின் குமுறல்

    தனயனின் குமுறல்

    இந்தியாவைக் காக்கும் ஜனநாயகப் போர்க்களத்துக்கு நாங்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறோம்." என்று ஸ்டாலினின் ஆதங்கம், வேதனை, சொல்லொணாத் துயரம் என எல்லா வார்த்தைகளுமே தந்தையை இழந்த தனயனின் குமுறலாகவே வெளிப்பட்டது. வழக்கம்போல் துரைமுருகன் பேச்சு கலகலதான்.

    பெயர் ராசி

    பெயர் ராசி

    "ராகுல் அவர்களே.. நீங்கள் சென்னைக்கு வந்து போனாலே பிரதமர் பதவி தானாக வரும். காரணம், எங்கள் மறைந்த தலைவர் கருணாநிதியின் கை ராசி அப்படி. அவர் மகன் ஸ்டாலினின் பெயர் ராசி அப்படி' என்றார். இதைக் கேட்டு சிரித்து கொண்ட ஸ்டாலின், பக்கத்தில் இருந்த ராகுல் காந்தியிடம், அதை மொழி பெயர்த்து சொன்னதும், ராகுல் அதை சிரித்தவாறே கேட்டுக் கொண்டார்.

    சர்ப்ரைஸ்

    சர்ப்ரைஸ்

    முக்கியமானவர் வராமல் போன நிலையில் திடீரென விழாவுக்கு வந்தார் வடிவேல். திமுகவுக்கு பிரச்சாரம் செய்யப்போய் அதனால் வடிவேலுவுக்கு நேர்ந்த விளைவுகள் தமிழகமே அறியும். எனினும் திரையுலகில் ஏதோ பிரச்சனை காரணமாக ஒதுங்கி இருந்த வடிவேலும் திடீரென அரங்கத்துக்குள் நுழைந்தது பெரிய சர்ப்ரைஸ்.

    மரியாதை வெளிப்பாடு

    மரியாதை வெளிப்பாடு

    "கலைஞர் அவர்கள் அரசியல் சாணக்கியனாக திகழ்ந்தார். சாணக்கியன் என்று சொல்வதை விட அதற்கும் மேலான ஏதேனும் சொல் இருக்கின்றதா என பார்க்கிறேன்." என்று சொல்லிவிட்டு தற்போதுவரை கருணாநிதிமீது உள்ள மரியாதையை வெளிப்படுத்திவிட்டு போனார் வடிவேலு.

    தயாநிதி மாறன்

    தயாநிதி மாறன்

    எப்பவுமே திமுக கூட்டங்கள் என்றாலே தயாநிதிமாறன்தான் முன்னால் இருப்பார். ரொம்ப நாளைக்கு பிறகுதான் அவரை மேடையில் பார்க்க முடிந்தது. அதுவும் பின்வரிசையில் இருந்தது வித்தியாசமாக இருந்தது.

    English summary
    Rahul Gandhi took a video on the opening of the Karunanidhi statue by Sonia Gandhi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X