சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மிஸ், மிஸ்.. இந்தி நம்ம தேசிய மொழி இல்லை.." டீச்சருக்கு பாடம் நடத்திய பள்ளி சிறுமி.. மாஸ் ஆடியோ!

இந்தி தேசிய மொழி என பாடம் நடத்திய ஆசிரியருக்கே பாடம் நடத்தியுள்ளார் ஒரு மாணவி

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி நமது தேசிய மொழி என்று ஒரு ஆசிரியர் ஆன்லைன் கிளாஸில் பாடம் நடத்தி உள்ளார்... இதைக்கேட்ட ஒரு மழலை மாணவியோ, அந்த ஆசிரியருக்கே பாடம் நடத்திய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Recommended Video

    மிஸ், மிஸ்.. இந்தி நம்ம தேசிய மொழி இல்லை.. டீச்சருக்கு பாடம் நடத்திய பள்ளி சிறுமி.. மாஸ் ஆடியோ!

    மொழி என்பது, ஆரம்பத்தில், நமது எண்ணங்களை தெரிவிக்க வந்த ஒரு கருவியாகவே பார்க்கப்பட்டது.. ஆனால், காலப்போக்கில், தவிர்க்க முடியாத ஒரு இடத்தை மொழி ஆக்கிரமித்து கொண்டது..

    ஒருகட்டத்தில் மொழியில்லாமல் எந்த இன்னமும் இல்லை, பண்பாடும் என்ற நிலைமையும் உருவாக துவங்கிவிட்டது..

    பள்ளி மாணவியை இரண்டாவது திருமணம் செய்த ஆசிரியர்.. 3வது கல்யாணத்துக்கு வேற ப்ளான் பள்ளி மாணவியை இரண்டாவது திருமணம் செய்த ஆசிரியர்.. 3வது கல்யாணத்துக்கு வேற ப்ளான்

    இந்தியா

    இந்தியா

    நம் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு.. பல மொழிகளின் தாயகம் என்பது பெருமைக் கொள்ளக்கூடிய விஷயம் என்றாலும், இதே விஷயம்தான் பல்வேறு சமயங்களில் பிரச்சனையாகவும் வெடித்து விடுகிறது..
    குறிப்பாக மத்தியில் எப்போதெல்லாம் ஆட்சி மாறுகிறதோ, அப்போதெல்லாம் கல்வி கொள்கையும் மாற்றப்படுகிறது. எப்போதெல்லாம் கல்விக் கொள்கை மாற்றம் குறித்த பேச்சு வருகிறதோ, அப்போதெல்லாம் புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் மும்மொழி கொள்கை கொண்டு வரப்படுகிறது..

     இந்தி மொழி

    இந்தி மொழி

    இதற்கு நடுவில் இந்தி என்பது நம்முடைய தேசிய மொழி இல்லை என்பதை பல ரூபங்களில் நாம் பதிவு செய்ய வேண்டி உள்ளது.. கூட்டாட்சி நாடாக இந்தியா பார்க்கப்படுவதால், ஒரே ஒரு மொழியை பொதுமொழியாக ஏற்பது என்பது சாத்தியமில்லாமல் உள்ளது.. அப்படி ஒரே மொழியை இங்கு ஏற்றால், மற்ற மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பது போன்றதாகிவிடும் என்ற கருத்தும் இங்கு ஆழமாக உள்ளது.. இதன் காரணமாகவே, இந்தியாவின் தேசிய மொழி என்ன என்பது குறித்து, பல சர்ச்சைகளும், அதையொட்டிய விவாதங்களும் நிலவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

     ஆன்லைன் கிளாஸ்

    ஆன்லைன் கிளாஸ்

    அந்த வகையில், ஒரு ஆடியோ இன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. ஒரு ஆன்லைன் கிளாஸ் நடக்கிறது.. அந்த கிளாஸில் படிக்கும் ஒரு சிறுமி, தன்னுடைய டீச்சருக்கே மொழி குறித்து வகுப்பு எடுப்பது போல உள்ளது.. ஆன்லைன் கிளாசில் ஆசிரியர் பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்.. அப்போது, நமது தேசிய மொழி இந்தி என்று அவர் சொல்கிறார்.. இந்த கிளாஸை கவனித்து கொண்டிருந்த கேத்தரின் என்ற சிறுமி, இதை பற்றி கருத்து சொல்லட்டுமா என்று ஆசிரியரிடம் அனுமதி கேட்கிறாள்.. ஆசிரியரும் சரி என்கிறார்..

    சிறுமி

    சிறுமி

    உடனே அந்த சிறுமி தன் மழலை குரலில் "இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாதே" என்கிறாள்.. குழந்தையின் இந்த பதிலை ஆசிரியர் எதிர்பார்க்கவே இல்லை.. என்றைக்கோ தான் வகுப்பில் சொன்னதை நினைவில் வைத்து சரியான நேரத்தில் சிறுமி சொல்வதை கேட்டு அசந்துவிட்டார். அதுமட்டுமல்ல, "இந்தியாவில் மலையாளம், தெலுங்கு, தமிழ் என இப்படி பல மொழிகள் இருக்கிறதே" என்று திருப்பி கேட்கிறாள்.

    ஆடியோ வைரல்

    கேத்தரினின் இந்த பேச்சை கேட்ட ஆசிரியரோ, தன் தவறை உணர்ந்ததுடன், உடனே சுதாரித்து கொண்டு, வெரிகுட் கேத்தரின், good என்று சொல்லி சிறுமியை பாராட்டுகிறார்.. வகுப்பு ஆசிரியைக்கே பாடம் நடத்திய இந்த குழந்தையின் மழலை ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.. சிறுமியின் பேச்சை கேட்டு நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு போயுள்ளார்கள்.

    English summary
    Hindi National Language and School girl explained in online class
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X