சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. வெந்த புண்ணில் விரலை விட்டு பாய்ச்சுதே இந்த இந்து மக்கள் கட்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்லாமிய சமுதாய மக்களின் அதிருப்தியை வாங்கிக்கொண்ட திமுக, அதிமுக

    சென்னை: வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல இருக்கிறது அந்த போஸ்டர்!

    திமுக, அதிமுக என இரு மாபெரும் கட்சிகள் ஆளுக்கு 20, 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஆனால் இந்த ஒன்றில் கூட ஒரு முஸ்லீம் வேட்பாளரையும் இவர்கள் ரெண்டு பேருமே நிறுத்தவில்லை.

    பாஜக ஒருக்காலும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்காது என்பது நாடறிந்த விஷயம்தான். ஆனால் இஸ்லாமியர்களின் பாதுகாவலன் என்று சொல்லி கொள்ளும் அதிமுக, திமுக இப்படி செய்யலாமா என்பதுதான் கேள்வி!

    அதனால்தான் இஸ்லாமிய சமுதாய மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு போஸ்டரை வேலை மெனக்கெட்டு அச்சிட்டு ஒட்டியுள்ளது இந்து மக்கள் கட்சி.

    அதிமுக 1, திமுக 2.. தேமுதிக அதுவும் கிடையாது.. பாமக சுத்தம்.. பெண்களை புறக்கணித்த பெரிய கட்சிகள் அதிமுக 1, திமுக 2.. தேமுதிக அதுவும் கிடையாது.. பாமக சுத்தம்.. பெண்களை புறக்கணித்த பெரிய கட்சிகள்

    நன்றி

    நன்றி

    அந்த போஸ்டரில் "இந்து மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று ஒரு முஸ்லிம் வேட்பாளர்களை கூட களமிறக்காத திரு.மு.க.ஸ்டாலின், திரு.பழனிச்சாமி ஆகியோருக்கு கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்! பாரத பணியில் ஒன்றிணைந்து பயணிப்போம்! இந்து மக்கள் கட்சி - தமிழகம்" என்று அந்த போஸ்டரில் உள்ளது. கூடவே அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் போட்டோவும் இருக்கிறது.

    கொள்கை, கோட்பாடு

    கொள்கை, கோட்பாடு

    பிரிவினையை தூண்டுபவர்கள் யார், பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்பவர்கள் யார், எதை விதையாக விதைத்து இந்த நச்சு வளர்க்கப்படுகிறது, என்பதற்கெல்லாம் இந்த ஒரு போஸ்டரே சாட்சி! இந்த கட்சியின் கொள்கை, கோட்பாடு எதுவாக இருந்துட்டு போகட்டும், ஆனால் ஸ்டாலினுக்கும், முதல்வருக்கும் நன்றி சொல்லி உள்ளார்.

    அர்ஜூன் சம்பத்

    அர்ஜூன் சம்பத்

    அப்படியானால் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இருக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் இவர்கள் இருவரிடமும் வேண்டுகோள் வைத்தாரா? அதனை ஏற்றுதான் இஸ்லாமியர்கள் இல்லாத வேட்பாளர் பட்டியலை இரு திராவிட கட்சிகளும் வெளியிட்டனவா என்பது தெரியவில்லை.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    ஒருவேளை இவர்களுக்கும் இந்த போஸ்டருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றால், உடனடியாக இதற்கு எதிர்ப்பும், கண்டனமும், நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பது பொதுவானவர்களின் எதிர்பார்ப்பு.

    English summary
    ADMK and DMK did not announce Muslim candidate in MP Election. Hindu Makkal Katchi thanked the Chief Minister and MK Stalin for this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X