சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்துக்களை அவமதித்தால் ஸ்டாலின், வைகோ கண்டிக்கமாட்டார்களா?.... தமிழிசை கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக அஜித்தை அழைக்கவே இல்லை - தமிழிசை | Oneindia Tamil

    சென்னை: லயோலா கல்லூரியில் இந்துக்களை அவமதிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அரசியல் கட்சி தலைவர்கள் கண்டிக்காதது ஏன்? என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இந்து மதத்தையும், பெண்களையும் அவமதிக்கும் வகையிலான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கடும் எதிர்ப்பு எழுந்ததால் அந்த கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.

    Hindus Insult at Loyola College, Why political party leaders not condemn asking Tamilisai

    மதக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கண் காட்சி நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னணியை போலீசார் கண்டறிய வேண்டும்.

    இதுபோல வேறு மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என அனைத்துத் தலைவர்களும் கொதிந்தெழுந்து கண்டன அறிக்கை விட்டிருப்பார்கள்.

    ஆனால், இந்துக்களை அவமதிக்கும் கண்காட்சியை கண்டிக்கக்கூட அவர்களால் முடியவில்லை. எல்லா விதத்திலும் இரட்டை அளவுகோல்களை பின்பற்றுகின்றனர். இனியும் இதை மக்கள் பொறுக்கமாட்டார்கள் என்று கூறினார்.

    English summary
    Why political party leaders not condemn the exhibition which was held to insult Hindus at Loyola College? BJP state president Tamilisai has questioned.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X