சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாற்றில் அந்த சோக நாள்...இடுக்கி நிலச்சரிவு...1924க்குப் பின்னர் அதிக மழை!!

Google Oneindia Tamil News

சென்னை: கேரளாவில் மழை என்றாலே உற்று கவனிக்கப்படும் பகுதியாக இடுக்கி மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகள் அமைந்துள்ளன. குறிப்பாக மூணாறு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கன மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நடப்பாண்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 1924ஆம் ஆண்டில் இருந்து பெய்த கன மழை மற்றும் எதனால் ராஜமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு வெதர் மேன் செய்தி வெளியிட்டுள்ளார்.பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலையில் பெரும் மாற்றம்.. வெளுக்கப் போகுது மழை.. எப்போது தெரியுமா? ஐஎம்டி வெளியிட்ட பரபர தகவல் காலநிலையில் பெரும் மாற்றம்.. வெளுக்கப் போகுது மழை.. எப்போது தெரியுமா? ஐஎம்டி வெளியிட்ட பரபர தகவல்

ஈரமான பகுதிகள்

ஈரமான பகுதிகள்

அவர் வெளியிட்டு இருக்கும் செய்தியில், ''இடுக்கியில் ஒவ்வொரு ஆண்டும் 5000 எம்எம் மழை பெய்யும். பீர்மேடு, பொன்முடி ஆகிய இடங்களில் 4000 - 5000 எம்எம் வரை மழை பெய்வது வழக்கம். ஆனால், கல்லாறு எஸ்டேட், ராஜமலை. பெட்டிமுடி ஆகிய இடங்களில் பீர்மேடுவைவிட அதிக மழை பெய்துள்ளது. ராஜமலையில் 2000-2010 ஆம் ஆண்டுகளில் 9000 எம்எம் மழை பெய்துள்ளது. பெட்டிமேடு பகுதியில் 2013-2015 ஆம் ஆண்டுகளில் 8000 எம்எம் மழை பெய்துள்ளது. தென்னிந்தியாவில் மிகவும் ஈரமான பகுதிகளாக கருதப்படுகின்றன. கர்நாடகாவில் இருக்கும் தலைக்காவிரி, ஆகம்பே, ஹூளிகல், அமாகாவன் ஆகிய பகுதிகளும் மிகவும் ஈரமான பகுதிகளாக காணப்படுகின்றன.

கன மழை பதிவு

கன மழை பதிவு

ராஜமலை பகுதியில் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டில் மழை அதிகரித்து பெய்து வந்துள்ளது. அந்த ஆண்டில் 9074 எம்எம் மழையும், 2005 ஆம் ஆண்டில் 9364 எம்எம் மழையும், 2006ஆம் ஆண்டில் 7731 எம்எம் மழையும், 2007ஆம் ஆண்டில் 9291 எம்எம் மழையும் பெய்து வந்துள்ளது.

எல்நினோ வறட்சி

எல்நினோ வறட்சி

கேரளாவில் பெட்டிமுடி பகுதியில் அதிகளவில் ஒவ்வொரு ஆண்டும் 5500 எம்எம் மழை பதிவாகியுள்ளது. கல்லாறு எஸ்டேட், காகாயம் அணை, ராஜமலை, லக்கிடி, வாலக்காடு ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கன மழை பெய்து வந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் எல்நினோ வறட்சி இருந்த காலத்திலும், பெட்டிமுடியில் 6500 எம்எம் மழை பெய்துள்ளது.

பெட்டிமுடி பகுதியில் தொடர்ந்து 2013ஆம் ஆண்டில் 8052 எம்எம் மழையும், 2014 ஆம் ஆண்டில் 8023 எம்எம் மழையும், 2015ஆம் ஆண்டில் 6504 எம்எம் மழையும் பெய்துள்ளது.

Recommended Video

    மீண்டும் TikTok | Ambani's Reliance உதவியை நாடும் Byte Dance | Oneindia Tamil
    40 ஆண்டுகளில் அதிகபட்சம்

    40 ஆண்டுகளில் அதிகபட்சம்

    கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பெட்டிமுடியில் மட்டும் 24 மணி நேரத்தில் 616 எம்எம் மழை பெய்துள்ளது. இடுக்கியில் 2018 முதல் 2019 வரை பெய்த மழையை விட இது அதிகம். 96 மணி நேரத்தில் 1600 எம்எம் மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் 4ஆம் தேதியில் இருந்தே கன மழை பெய்து வந்தாலும், ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 7 வரையிலான 24மணி நேரத்தில் மழை கொட்டி தீர்த்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் அந்தப் பகுதியில் அதிகபட்ச மழை என்று தெரிய வந்துள்ளது. (இதற்கு முந்தைய நாள் இரவில்தான் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர் மேன் தனது ஃபேஸ்புக் போஸ்டில் பதிவு செய்து இருந்தார். அதேபோல், ஆகஸ்ட் 7ஆம் தேதி அதிகாலை ராஜமலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.)

    English summary
    Historic Rains in Pettimudi registered 616 mm in 24 hrs on the sad day landslide occurred
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X