சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முத்தையா போலொரு சரித்திர ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் வாய்ப்பது அரிது.. கமல் இரங்கல்

Google Oneindia Tamil News

சென்னை: முதுபெரும் வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையாவின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கமல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திரு.S.முத்தையா அவர்களை போலொரு சரித்திர ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் வாய்ப்பது அரிது. அவரின் மறைவு என் போன்ற ரசிகருக்கு பேரிழப்பு.

Historical researcher, author As muthiaha chances are rare.. kamalhasan Mourned

பொன்னமராவதி சர்ச்சை ஆடியோ... கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம் பொன்னமராவதி சர்ச்சை ஆடியோ... கலிஃபோர்னியாவில் உள்ள வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம்

மருதநாயகம் வரலாற்று ஆராய்ச்சியில், அவரின் பங்களிப்பை என்றும் நன்றியுடன் நினைவு கூறுவேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பழம்பெரும் வரலாற்று ஆசிரியரான எஸ். முத்தையா, உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

சென்னையின் அரசியல், புவியியல் மற்றும் கலாச்சார வரலாறு பற்றிப் பல புத்தகங்களை எழுதியுள்ள வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் இவர். எஸ்.முத்தையா கொழும்பில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார். இதன்பிறகு அமெரிக்காவில் 1946 முதல் 1951 வரை கட்டிட பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் பயின்றுள்ளார்.

இலங்கை, சென்னை வரலாறு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்கள் இவர் கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. சென்னையின் பழமையை பாதுகாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டவர் எஸ்.முத்தையா. இவரின் மறைவு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாக கருத்தப்படுகிறது.

English summary
MNM Party leader and actor Kamal Haasan mourned to the oldest historian S. Muthiah's death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X