சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா உங்களை பாதித்துள்ளதா.. 10 வினாடியில் நீங்களே கண்டுபிடிக்கலாம்.. வைரல் மெசேஜ்.. நிஜம் என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸை விட மிகக் கொடுமையானது, அது தொடர்பாக வாட்ஸ்அப்களில் பார்வர்டு செய்யப்படும் போலி மெசேஜ்கள். இதை நம்பி எத்தனையோ பேர் தங்கள் உயிரை பணயம் வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

Recommended Video

    கொரோனா Update: இதுவரை 3 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்கவே இதுபோன்ற வாட்ஸ்அப் வதந்திகள் பேரிடர் காலங்களில் பெரும் இடையூறாக மாறிவிடுகின்றன.

    இப்படித்தான் ஒரு மெசேஜ் உலகம் முழுக்க கொரோனா பற்றி பரவி வருகிறது. ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு சில டிப்ஸ் என்றவகையில் அந்த தகவல்கள் இருக்கின்றன.

    இது சவால்யா.. சிக்கன் சாப்பிடுங்க.. கொரோனா வராது.. மீறி வந்தா ரூ. 1 கோடி.. வியாபாரிகள் பலே! இது சவால்யா.. சிக்கன் சாப்பிடுங்க.. கொரோனா வராது.. மீறி வந்தா ரூ. 1 கோடி.. வியாபாரிகள் பலே!

    10 வினாடிகள்

    10 வினாடிகள்

    உதாரணத்துக்கு.. உங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு குறைந்தபட்சம் 10 வினாடிகள் மூச்சை அப்படியே நிறுத்தி வைத்து பார்க்க வேண்டுமாம். உங்களால் 10 விநாடிகள் மூச்சை நிறுத்தி வைக்க முடியும், அதுவும் இருமலோ அல்லது கஷ்டம் இல்லாமல் இதை செய்யமுடியும் என்றால் உங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வரவில்லை என்று அர்த்தம் என்கிறது அந்த மெசேஜ்.

    தண்ணீர்

    தண்ணீர்

    அதேபோல ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் நீங்கள் தண்ணீரை பருக வேண்டும். உடலை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது வாய்க்குள் வைரஸ் சென்றால் கூட நீங்கள் தண்ணீர் குடிப்பதால் அது வயிற்றுக்குள் சென்று, வயிற்றில் உள்ள ஆசிட் அந்த வைரஸை கொன்று விடும் என்கிறது மற்றொரு மெசேஜ். அதுவும் ஜப்பானைச் சேர்ந்த ஒரு டாக்டர் இவ்வாறு சொல்லியதாக கூறுகிறது இந்த மெசேஜ்.

    தொற்று நோய் நிபுணர்

    தொற்று நோய் நிபுணர்

    இது தொடர்பாக சர்வதேச ஊடகமான சிஎன்என் கள ஆய்வு நடத்தியது. பேய்லர் மருத்துவக் கல்லூரியின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ராபர்ட் லெகரே அட்மருடன் சிஎன்என் இதுபற்றி கருத்துக் கேட்டு. அவர் இந்த கருத்துக்களை மறுத்துவிட்டார். கடுமையான வைரஸ் தொற்று உள்ள எவருக்கும் இருமல் இல்லாமல் ஆழ்ந்த மூச்சை இழுப்பது கடினம். இந்த இயலாமை ஒரு நபருக்கு கொரோனா இருப்பதை குறிக்காது. மேலும் 10 வினாடிகளுக்கு மேல் மூச்சைப் பிடிக்கக்கூடிய ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும் அர்த்தமல்ல. வேறு காரணங்களாலும் கூட இப்படி செய்ய முடியாமல் போகலாம்.

    மூக்கு

    மூக்கு

    குடிநீர் பற்றிய மெசேஜுக்கு, டாக்டர் ராபர்ட் கருத்து இதுதான். இந்த அணுகுமுறைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், மக்கள் மூக்கு வழியாக சுவாசிக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மூக்கு வழியே வைரஸ் உடலுக்குள் சென்றால் என்ன செய்ய முடியும். கொரோனா வைரஸ் அதன் அறிகுறிகளை காட்ட, சிறிது நேரம் பிடிக்கலாம். ஒரு நபர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நேரத்தில், அவர்களின் நுரையீரல் பொதுவாக 50% ஃபைப்ரோஸிஸ் ஆகும், அது மிகவும் தாமதமானது.

    புறக்கணியுங்கள்

    புறக்கணியுங்கள்

    கொரோனா வைரஸால், பாதிக்கப்பட்டவர்களில் 80% பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. ஃபைப்ரோஸிஸ் பிரச்சினை சில சதவீதத்தினருக்கு மட்டுமே உருவாகிறது. வைரஸின் வெளிப்படும் காலம் இரண்டு வாரங்கள் என்றாலும், அறிகுறிகள் ஐந்து முதல் ஆறு நாட்களுக்குள் தோன்றும். சில நோயாளிகள் மட்டுமே கடுமையான சுவாச பிரச்சினை அறிகுறிகளை இரண்டாவது வாரத்திலேயே அனுபவிப்பார்கள். ஃபைப்ரோஸிஸ் அபாயத்திலும், அவர்கள் இருக்க கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். எனவே இதுபோன்ற மெசேஜ்களை தவிர்க்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    English summary
    A recent viral coronavirus "simple self-check test," which medical experts say is completely inaccurate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X