சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தண்ணீர் தட்டுப்பாடு.. தாம்பரத்தில் அரசு பள்ளிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கிழக்கு தாம்பரத்தில் அரசுப் பள்ளிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் நிலத்தடி நீரும் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டன.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பே கோடை வெயில் காரணமாக பள்ளித் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என பெற்றோர் கேட்டுக் கொண்டனர். எனினும் தமிழக அரசு திட்டமிட்டபடி ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகளை திறந்தது.

பீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா? ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி பீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா? ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி

தண்ணீர் தட்டுப்பாடு

தண்ணீர் தட்டுப்பாடு

இந்த நிலையில் பள்ளிகளில் தண்ணீர் இல்லாததால் பள்ளிகள் மீண்டும் மூடப்படுகின்றன என செய்திகள் உலா வந்தன. இதை பள்ளிக் கல்வித் துறை வதந்தி என கூறி மறுத்தது. கடந்த 15 நாட்களாக பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

விடுமுறை

விடுமுறை

இந்த நிலையில் கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிகளில் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நீர் பற்றாக்குறை காரணமாக 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேமிக்க முடியவில்லை

சேமிக்க முடியவில்லை

கல்வித் துறையின் அனுமதி பெற்றே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதிக விலை கொடுத்து இந்த பள்ளியில் தண்ணீர் வாங்கியபோதும் அதை சேமித்து வைக்க முடியவில்லை.

பள்ளி நிர்வாகம்

பள்ளி நிர்வாகம்

இதனால் சம்ப் எனப்படும் கீழ் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகள் ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
Holiday announced for East Tambaram Government School because of water Crisis. They announced leave for 6 th to 8th students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X