சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுத்தமான சுவாசம்.. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்..வெட்டிவேர் மாஸ்குகளை வீட்டில் தயாரிப்பது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தி, மனதை அமைதிப்படுத்தும் அற்புத மூலிகையான வெட்டிவேரால் ஆன மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.

கொரோனா பரவல் வந்தாலும் வந்தது, மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த மாஸ்க், கிளவுஸ், உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பொது இடங்களில் செல்லும் போது மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்பதால் இந்த ஏற்பாடு.

இதில் சர்ஜிக்கல் மாஸ்க், என் 95 மாஸ்க், துணியினாலான வீட்டில் தயாரிக்கப்பட்டது என மாஸ்க்குகள் வருகின்றன. அதிலும் கலர் கலராக குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன்களுடன் கூடிய மாஸ்க்களும், உடைக்கேற்ற நிறத்தினாலான மாஸ்க்குகளும் விற்பனையாகின்றன. சாலையோர மர நிழல்களில் இந்த கடைகள் சூடுபிடித்துள்ளன.

இந்தியாவில்...4ல் ஒருவருக்கு...கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி...ஆய்வில் தகவல்!! இந்தியாவில்...4ல் ஒருவருக்கு...கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி...ஆய்வில் தகவல்!!

மருத்துவ நிபுணர்கள்

மருத்துவ நிபுணர்கள்

ஆனால் பனியன் துணிகளால் ஆன மாஸ்க்குகளை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். வீட்டில் தயாரிக்கப்பட்ட மாஸ்க்குகளை பயன்படுத்திய பிறகு தினமும் துவைக்க வேண்டும் என்கிறார்கள். வைர கற்கள் பதித்த மாஸ்க்குகள், தங்கத்தினால் ஆன மாஸ்க்குகள் என வந்துவிட்டன. இவையெல்லாம் நமது வசதியை மற்றவர்களுக்கு காண்பிக்கும்.

ஆன்டி செப்டிக்

ஆன்டி செப்டிக்

ஆனால் பணம், ஸ்டைல் இவற்றை விட உடல்நலத்திற்கு என்ன தேவை என்பது தான் முக்கியம். தற்போது வெட்டிவேர் மூலிகையால் ஆன மாஸ்க்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த அற்புதமான மூலிகையான வெட்டிவேரால் நமக்கு பல நன்மைகள் உள்ளன. உடல் சூட்டை தணிக்கும். அழற்சிக்கு எதிராக செயல்படும். ஆன்டி செப்டிக் தன்மை கொண்டது.

நன்மை

நன்மை

முக்கியமாக இதை சுவாசிப்பதன் மூலம், அல்லது தண்ணீருடன் உட்கலந்து குடிப்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மனதை அமைதிப்படுத்தும். தோல் நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். முகப்பரு ஆகியவற்றை நீக்கும். இவை அதன் பயன்படுத்துவதற்கு ஏற்ப நமக்கு மேற்கண்ட நன்மைகளை தரும்.

வைரஸ்

வைரஸ்

இந்த வெட்டிவேர் மாஸ்க்குகளை பயன்படுத்தும்போது நமது சுவாசத்தில் இருந்து வரும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்பட்டு தூய்மையான காற்றை சுவாசிக்க வைக்கிறது. சுத்தமான காற்று கிடைத்தாலே வைரஸுக்கு எதிராக செயல்படுகிறது என்பதுதான் அர்த்தம். எனவே இது போன்ற மாஸ்க்குகளை தாராளமாக பயன்படுத்தலாம்.

வெட்டிவேர்

வெட்டிவேர்

இதை வெளியே விலை கொடுத்தும் வாங்குவோர் வாங்கிக் கொள்ளலாம். இதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம். முதலில் சுத்தமான காட்டன் துணிகளை எடுத்துக் கொண்டு சிறிது சிறிதாக கட் செய்து கொள்ள வேண்டும். அதாவது செவ்வக வடிவத்தில்... பின்னர் அதன் மூன்று பக்கத்தையும் தைத்து கொண்டு, ஒரு பக்கத்தில் வெட்டிவேரை கட் செய்து உள்ளே நுழைக்க வேண்டும்.

மாஸ்க்

மாஸ்க்

பின்னர் அந்த பகுதியையும் தைத்துவிட வேண்டும். இதை அப்படியே எடுத்து நாம் பயன்படுத்தும் மாஸ்க்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பெரிய துணிகளாக கட் செய்து இரு காதுகளை வைத்து மாஸ்க்காகவும் தைத்துக் கொள்ளலாம். சிறிய பாக்கெட்களாக தைத்துக் கொண்டால், இவை 8 மணி நேரத்திற்கு நன்றாக இருக்கும். பின்னர் கைவசம் தைத்துள்ளதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள்

இல்லாவிட்டால் அந்த பழைய வெட்டிவேரை எடுத்து போட்டுவிட்டு ஒரு பக்கம் தையலை பிரித்து அதில் வெட்டிவேரை நுழைத்து கையில் ஊசி கொண்டோ அல்லது மிஷினிலோ தைத்து கொள்ளலாம். விடுமுறை, ஓய்வு நேரத்தில் தைத்து வைத்துக் கொண்டால் பயன்படுத்த எளிதாக இருக்கும். நல்ல சுவாசமும் கிடைக்கும், உடல் சூடும் தணியும்.. ஆஹா இத்தனை நன்மைகளா!

Recommended Video

    Delhi AIIMS மருத்துவமனையில் Amit Shah அனுமதி | OneIndia Tamil

    English summary
    Vetiver improves immunity. We can make home made masks using this herb.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X