சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீட்டு பணியாளர்கள் வேலைக்கு போகக் கூடாது.. தமிழக அரசு திடீர் உத்தரவு.. பழைய அரசாணை ரத்து

Google Oneindia Tamil News

சென்னை: வீட்டு வேலை பணியாளர்கள் அனுமதி பெற்று பணிக்கு செல்லலாம் என்று பிறப்பித்த உத்தரவை, தமிழக அரசு வாபஸ் பெற்றுக் கொண்டு உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவினை மே 4ஆம் தேதி முதல், 17ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை, சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்து அதன் அடிப்படையில் மே 3ஆம் தேதி அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

Home maids will not get get permission to go to work: Tamil Nadu

இந்த அரசாணையில், வீட்டு வேலை பணியாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்பட்டது.

தற்போது பொதுநலன் கருதி மே 4ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் வீட்டுவேலை பணியாளர்களுக்கு பணிபுரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

Home maids will not get get permission to go to work: Tamil Nadu

இந்தியாவிலேயே முதல் மாநிலம்.. மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தெலுங்கானா அரசு அதிரடிஇந்தியாவிலேயே முதல் மாநிலம்.. மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. தெலுங்கானா அரசு அதிரடி

ஆகவே வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் 17 ஆம் தேதி நள்ளிரவு ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்கு செல்லாமல், அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu government has withdrawn the directive issued by the domestic workers to get permission to go to work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X