• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முஸ்லிம் பெண் மீது தலித் நபருக்கு "ப்ரியம்".. அரிவாளுடன் வயலுக்கு ஓடோடி வந்த அப்பா.. மிரண்ட கிராமம்

Google Oneindia Tamil News

சென்னை: தலித் இளைஞரை ஒரு இஸ்லாமிய பெண் காதலித்ததுதான் மாபெரும் குற்றமாகிவிட்டது.. அந்த முஸ்லிம் பெண்ணின் குடும்பத்தினர், காதல் ஜோடி 2 பேரையுமே கொடூரமாக கொன்றுவிட்டனர்.. இந்த ஆணவ கொலை கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் சலடஹில் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பசவராஜ் மடிவலபா படிகர் என்ற தலித் இளைஞர் வசித்து வந்தார்.. இவருக்கு 18 வயதாகிறது..

அதே கிராமத்தை சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார்... இந்த பெண்ணுக்கும் 18 வயதாகிறது.. இவரும் பசவராஜை காதலித்துள்ளார்.

கடைசியாக.. உயிர்பிரியும்போது.. ரேகா சொன்ன விஷயம்.. அதிர்ந்த போலீசார்.. யார் அந்த நெல்லை இளைஞர்!கடைசியாக.. உயிர்பிரியும்போது.. ரேகா சொன்ன விஷயம்.. அதிர்ந்த போலீசார்.. யார் அந்த நெல்லை இளைஞர்!

தலித்

தலித்

இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.. அப்போதுதான் பசவராஜ் தலித் என்பதும் தெரியவந்தது.. தலித் மட்டுமல்லாமல், வேறு மதம் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்தனர்.. எதிர்ப்பு தெரிவித்தனர்.. காதலை கைவிடுமாறு மகளை மிரட்டினர்.. ஆனாலும் காதல் மேலும் வலிமையாகியபடியே வந்துள்ளது.

 ஆயுதங்கள்

ஆயுதங்கள்

நேற்று முன்தினம் இந்த ஜோடி ஒரு வயல்வெளியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.. இதை பெண்ணின் சொந்தக்காரர்கள் பார்த்துவிட்டு, அவரது அப்பாவுக்கு தகவல் தந்துள்ளனர்.. அவரோ இதை கேள்விப்பட்டு, கையில் அரிவாளுடன் வந்துவிட்டார்.. கூடவே ஆட்களையும், ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு அந்த வயல்வெளிக்கு வந்தார்.. கண்ணெதிரே அந்த ஜோடியை பார்த்ததும் மேலும் டென்ஷன் ஆனார்.

 வயல்வெளி

வயல்வெளி

அதே ஆத்திரத்தில் மொத்த பேரும் சேர்ந்து காதலர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கினார்கள்.. கண்மூடித்தனமாக அடித்தனர்.. அப்போதும் ஆத்திரம் தீராமல் 2 பேரையும் கயிற்றால் கட்டி அடித்துள்ளனர்..இந்த விஷயம் பசவராஜூவின் அம்மாவுக்கு தெரிந்து பதறியடித்து கொண்டு ஓடிவந்தார்.. அவங்களை அடிக்காதீங்க என்று அனைவரின் காலிலும் விழுந்து கெஞ்சினார்.. அப்போதும் அந்த தாய் கண் முன்னாடியே மகனை கத்தியால் குத்தி உள்ளனர்..

பாறாங்கல்

பாறாங்கல்

ரத்த வெள்ளத்தில் காதலன் சரிந்து விழுந்ததை பார்த்த, அந்த பெண் கதறினார்.. உடனே அந்த பெண்ணின் வயிற்றிலும் சரமாரியாக குத்திவிட்டனர்.. இதில் இருவருமே நிலைகுலைந்து துடிதுடித்தனர்.. அப்போதும் அந்த கும்பலுக்கு வெறி அடங்கவில்லை.. இருவரின் தலையிலும் ஒரு பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டனர்.. இதில் மொத்தமாக நசுங்கி இருவரின் உயிரும் பரிதாபமாக பிரிந்தது. காதல் ஜோடி இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டபிறகுதான், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

 தலைமறைவு

தலைமறைவு

இவ்வளவும் அந்த தாயின் கண்முன்னாடியே நடந்துள்ளது. தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்தக்கு வந்து 2 பேரின் சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக, பெண்ணின் அப்பா, அண்ணன் மற்றும் உறவினர்கள் என 4 பேரை கைது செய்துள்ளனர்... இன்னொருத்தர் தலைமறைவாக இருக்கிறார்..

வருத்தம்

வருத்தம்

தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்களில் ஆணவ கொலைகள் அதிகரித்து வருகின்றன.. ஆணவ கொலைகள் நடப்பதைவிட, இந்த ஆணவ கொலைகளை ஆதரித்து பேசும் அதிர்ச்சியும் ஆங்காங்கே நடந்து வருகிறது.. எங்கெல்லாம் ஜாதி, மதம் தலைதூக்குகிறதோ, அங்கெல்லாம் சக மனிதர்களின் வாழ்வு சகதியில் தள்ளப்பட்டு வருகிறது.. அத்துடன் வருங்கால தலைமுறைகளின் எதிர்காலமும் சேர்த்து பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறது என்பதே நம்முடைய இப்போதைய கவலை..!

English summary
Honour killing in Karnataka Vijayapura and four arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X