சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தடுப்பூசி கைக் கொடுக்கிறது.. மருத்துவமனைகளில் படுக்கைகள் காலி.. வயிற்றில் "பால்" வார்த்த டாக்டர்!

Google Oneindia Tamil News

சென்னை: சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு, மருத்துவமனையில் அனுமதி, ஆக்ஸிஜன் தெரபி, தீவிர சிகிச்சை பிரிவுக்கான அனுமதி உள்ளிட்டவை குறைந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் 2ஆவது அலை கடுமையாக இருந்து வந்த நிலையில் மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காத அளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது.

Hospital data shows a fall in Vaccinated Healthcare workers

இந்த நிலையில் தற்போது மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டதாலும் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டதாலும் தொற்று தற்போது குறைந்துள்ளது. இந்த கொரோனாவுக்கு சுகாதாரப் பணியினரும் தப்பவில்லை.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு டாஸ்க் ஃபோர்சின் தலைவர் டாக்டர் வி கே பால் கூறுகையில் சுகாதாரப் பணியாளர்களிடையே கொரோனா தடுப்பூசி போடப்பட்டவுடன் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்கு அனுமதி என்பது குறைந்துள்ளது.

அது போல் ஆக்ஸிஜன் தேவையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதியும் குறைந்து பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் 8991 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது.

இவர்களில் ஒரே ஒரு டோஸ் போடப்பட்டவர்களும் அடங்குவர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி என்பது குறைந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளியை அனுமதிப்பதை 94 சதவீதம் தடுக்கிறது. அப்படியென்றால் தடுப்பூசிகள் நோயை எதிர்த்து பாதுகாப்பை கொடுக்கிறது என்பது அர்த்தம்.

Recommended Video

    புதிய Lambda Corona பற்றி தெரியுமா? 29 நாடுகளுக்கு பரவிய New Variant | OneIndia Tamil

    சுகாதாரப் பணியாளர்களிடையே தடுப்பூசி போட்டபிறகு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 சதவீதம் பேராகும் என்றார் டாக்டர் பால்.

    English summary
    Hospital Data shows a fall in hospitalisation among vaccinated health care workers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X