சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொட்டாலே சுடும் வெங்காயத்தின் விலை.. ஓட்டல்களில் பிரியாணிக்கு வெங்காய பச்சடி கிடையாது

Google Oneindia Tamil News

Recommended Video

    Onion Price Hike | தொட்டாலே சுடும் வெங்காயத்தின் விலை

    சென்னை: வெங்காயத்தின் விலை ரூ 70 முதல் ரூ. 80 வரை விற்கப்படுவதால் ஹோட்டல்களில் பிரியாணிக்கு வெங்காய பச்சடி போடுவதை நிறுத்திவிட்டனர்.

    வெங்காயம் என்ற முக்கியமான ஒரு பொருள் சமையலுக்கு கூடுதல் சுவையை கொடுக்கும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை மிகவும் அதிகமாகி வருகிறது.

    தற்போது கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்கப்படுகிறது. சின்னவெங்காயத்தின் விலையும் ரூ 70 ஐ நெருங்கியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணமாக உற்பத்தியின்மை, அதிக அளவு பயன்படுத்தாததும் காரணமாக சொல்லப்படுகிறது.

    பற்றி எரியும் பெட்ரோல் விலை.. ஓராண்டில் இல்லாத புது உச்சம்.. வெங்காயம் விலையும் விர்ர்!பற்றி எரியும் பெட்ரோல் விலை.. ஓராண்டில் இல்லாத புது உச்சம்.. வெங்காயம் விலையும் விர்ர்!

    வரத்து குறைவு

    வரத்து குறைவு

    வெங்காயத்தை அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் உற்பத்தி குறைந்ததோடு அதன் வரத்தும் குறைந்துவிட்டது. மேலும் அறுவடை நேரத்தில் மழை பெய்து வருகிறது.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    இந்த மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மத்திய அரசு மற்றும் தனியார் கிடங்குகளில் உள்ள வெங்காயங்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெங்காய பதுக்கலை தடுக்கவும் விலை உயர்வை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    குறையும்

    குறையும்

    இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெங்காயத்தின் விலை குறையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வெங்காயத்தின் விலை அதிகரிப்பால் யாரும் வாங்காததால் வெங்காய உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் ஹோட்டல்களிலும் வெங்காயத்தின் விலையுயர்வால் சாம்பாரில் வெங்காயம் போடுவது குறைந்துள்ளது.

    நோ வெங்காய பச்சடி

    நோ வெங்காய பச்சடி

    ஹோட்டல்களில் விற்கப்படும் பிரியாணிக்கு முக்கியமான சைட்டிஷ் வெங்காய பச்சடியும் கத்திரிக்காய் குழம்பும்தான். வெங்காயத்தின் விலை உயர்வால் ஹோட்டல்களில் பிரியாணிக்கு பச்சடி வைக்கப்படுவதில்லை. இதனால் ஹோட்டல் ஊழியர்களுடன் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

    English summary
    As Onion Price goes upto Rs. 70- 80, Hotels cut short the Onion Raitha which will be served with Briyani.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X