சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்

அரசினை கேள்வி கேட்டு இல்லத்தரசி வெளியிட்ட வீடியோ வைரலாகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்

    சென்னை: "ஏங்க இந்த கவர்ன்மென்ட்டுக்கு இதெல்லாம் கண்ணு தெரியாதா? இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இதுக்கெல்லாம் தடை கிடையாதாமா" என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்துள்ளார் ஒரு பெண்.

    பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று 1-ம் தேதி முதல் அரசு உத்தரவு போட்டுவிட்டது. பொதுமக்களும் இதனை மதித்து ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள்.

    ஆனாலும் இதனை முழுமையாக ஏற்க மனமில்லாமலும், அரசு சொல்லி விட்டதே என்பதற்காகவும் கீழ்படிய வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டார்கள். இந்நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண் மக்களின் மனக்குமுறலை எளிமையாக வெளிப்படுத்தி உள்ளார்.

    பிஸ்கட் கவர்

    பிஸ்கட் கவர்

    அவரது கையில் (வெளிநாடுகளில் தயார் செய்யும்) பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட் கவர், லேஸ் சிப்ஸ் பாக்கெட் கவர்களை வைத்துள்ளார். மற்றொரு கையில் மெல்லிதான பிளாஸ்டிக் கவர் ஒன்றினை வைத்துள்ளார். இவைகளை உதாரணமாக காட்டியே தனது ஆதங்கத்தை கொட்டி தீர்க்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:

    இதுக்கு தடை இல்லையா?

    இதுக்கு தடை இல்லையா?

    "ஏங்க இந்த கவர்ன்மென்ட்டுக்கு இதெல்லாம் கண்ணு தெரியாதா? இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதா.. இதுக்கெல்லாம் தடை கிடையாதாமா? ஏன்னா.. இதெல்லாம் வெளிநாட்டுக்காரங்களுது... அவங்களெல்லாம் ஓஹோன்னு நம் நாட்டுல வந்து இருக்கலாம்.

    திரும்ப யூஸ் பண்ணலாம்

    திரும்ப யூஸ் பண்ணலாம்

    இதெல்லாம் நம்ம நாட்டுல தயார் பண்ற பிளாஸ்டிக். இந்த கவரையெல்லாம் ரீபிராசஸ் செய்யலாம். திரும்பவும் வேற ஒரு பொருளுக்கு, அதாவது குடை செய்ய, மக் செய்ய, ரோடு போட இப்படி இதை நாம யூஸ் பண்ணிக்கலாம்.

    அடைச்சிக்கிட்டு இருக்கு

    அடைச்சிக்கிட்டு இருக்கு

    நம்ம பிளாஸ்டிக்கை தூக்கி ரோட்டுல போட்டாக்கூட குப்பை பொறுக்கறவங்க இதை எடுத்துக்கிட்டு போய் எங்க சேக்கணுமோ அங்க சேர்த்துட்டு திரும்பவும் பொருளாகி நம்ம கிட்டயே வந்துடும். ஆனா வெளிநாட்டுக்காரனுங்க பிளாஸ்டிக்தான் எல்லா இடத்துலயும் அடைச்சிட்டு கிடக்கறது இதுதான்.

    நாம ஒழிஞ்சி போகணுமா?

    நாம ஒழிஞ்சி போகணுமா?

    ஆனா இதெல்லாம் கவர்மென்ட் தடை பண்ணல. என்னங்க நியாயம் இது? உள்நாட்டுக்காரங்க எல்லாம் ஒழிஞ்சு போயிடணும், வெளிநாட்டுக்காரங்க மட்டும் ஓஹோன்னு வாழனுமா? மக்களே இதுக்கெல்லாம் நீங்கதான் ஒரு தீர்வு சொல்லணும்" என்று நாக்கை பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்டு முடிக்கிறார் இவர்.

    English summary
    One of the housewives has released a video on the plastic barrier. She has questioned why the government did not ban all the plastic?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X