சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரக உள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல் எவ்வாறு நடைபெறும்? எப்போது தொடங்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள மறைமுக தேர்தலில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நேரடி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 515 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1 மணிக்கு முடிந்துவிடும்.

 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்.. 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் மாவட்ட உள்ளாட்சிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்.. 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல்

2 அதிகாரிகள்

2 அதிகாரிகள்

இந்த தேர்தலில் ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். பொதுமக்கள் வாக்களிக்க முடியாது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அந்தந்த மாவட்ட திட்ட அதிகாரிகள் தலைமையில் 2 அதிகாரிகள் கொண்ட குழு நடத்தும்.

விரும்புவோர்

விரும்புவோர்

ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலை மாவட்ட வளர்ச்சி அதிகாரி தலைமையிலான குழு நடத்தும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அதிகாரிகளிடம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

டிக் மார்க்

டிக் மார்க்

அவ்வாறு பதிவு செய்யும் பெயர்களை அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகளில் அகர வரிசைப்படுத்தி எழுதி வைத்திருப்பர். அந்த வாக்குச் சீட்டுகளில் தங்களுக்கு விருப்பமானவரின் பெயருக்கு நேராக பேனா மூலம் டிக் மார்க் இட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

இதைத் தொடர்ந்து வாக்குச் சீட்டை வாக்குப் பெட்டியில் போட வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்த பின்னர் வாக்குப் பெட்டியை திறந்து யார் வெற்றி பெற்றார்கள் என்பதையும் அதிகாரிகள் அறிவிப்பர். எனவே பிற்பகல் 3.30 மணிக்கு மறைமுக தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும்.

English summary
How a secret ballot will be conducted for the local body elections 2019? When will be the election results declared? Here are the details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X