சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது பொங்கல் பரிசு இல்லை.. லோக்சபா தேர்தலுக்கான முன்பணம்? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Recommended Video

    வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க தடை- வீடியோ

    சென்னை: தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக வழங்கப்படும் ரூ. 1000 பரிசுத் தொகை, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடிபோடுவதாகவே அமைந்துள்ளதாக தெரிகிறது.

    தமிழக சட்டசபையின் இந்தாண்டு முதல் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கமும் பரிசுகளும் வழங்கப்படும் என தனது உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவித்தார்.

    இந்த திட்டம் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

    பொங்கல் பரிசு

    பொங்கல் பரிசு

    இந்த பணம் உண்மையில் பொங்கல் பரிசா இல்லை வாக்குக்கு கொடுக்கப்படும் பணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான ரேஷன் கடைகள் முன் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு அதிமுக நிர்வாகிகள் அங்கு கூடியுள்ளனராம்.

    பொங்கல் பணம் இல்லை

    பொங்கல் பணம் இல்லை

    அவர்கள் அங்கு வரும் மக்களிடம் ரேஷன் கார்டு நகலை பெற்று கொண்டு இந்த பணம் பொங்கல் பணம் இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக எங்கள் கட்சி சார்பில் வழங்கப்படும் பணம். எனவே பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டை அதிமுகவுக்கு குத்துங்கள்.

    எதிரொலிக்கும்

    எதிரொலிக்கும்

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போல அதிமுகவிலிருந்து அதிகபடியான எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்தான் நமது பிரச்சினைகள் தீரும். தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என மக்களை பிரெய்ன்வாஷ் செய்வதாக கூறப்படுகிறது. இந்த கருத்தையே எதிர்க்கட்சிகளும் கூறுகின்றன.

    ஜெயலலிதா கொண்டு வந்தார்

    ஜெயலலிதா கொண்டு வந்தார்

    இதை கருத்தில் கொண்டுதான் பொங்கல் பரிசு திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பச்சரிசி, முந்திரி திராட்சை, வெல்லம் ஆகியவற்றுடன் சேர்த்து ரூ. 100 பணம் கொடுப்பதை ஜெயலலிதா கொண்டு வந்தார்.

    பணம் ஏது?

    அந்த ரூ. 100-ஐ நிறுத்திய தற்போதைய தமிழக அரசு ரூ. 1000-த்தை அள்ளிக் கொடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி இல்லை என கூறும் இந்த அரசுக்கு பொதுமக்களுக்கு கொடுப்பதற்கு மட்டும் ஏது பணம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிய நிலையில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறிய தமிழக அரசின் நிதி நிலையின் தற்போதைய திடீர் உயர்வுக்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    English summary
    How could the TN government has fund to give all the people Pongal gift? Some are saying that it is the amount given for Loksabha votes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X