சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீம்ஸ் போட்டு விளையாடாதீங்க.. எங்களை சீரியஸா எடுத்துக்கங்க.. கஜா கற்று கொடுத்து சென்ற பாடம்!

கஜா புயல் நமக்கு கற்று தந்த பாடம் என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    மிரட்டி விட்டு கிளம்பிச் சென்ற கஜா!- தமிழ்நாடு வெதர்மேன்- வீடியோ

    சென்னை: கஜா புயல் வரப்போகிறது என்று 10 நாளுக்கு முன்னாடியே நமக்கு தெரிந்து விட்டது. கஜாவை பத்தி ஊரெல்லாம் பேசியும் மீம்ஸ்களை தெறிக்க விட்டும் என்ன பயன்? கடைசியில் கஜா போகும்போது 28 உயிர்களை தன்னுடன் கூட்டிச் சென்றதுதான் மிச்சம்!

    புயலை பற்றி பரபரப்பாக பேசப்பட்டம் ஏன் இந்த உயிர்சேதம்? இப்படித்தான் ஒவ்வொரு முறையும் சொல்லுவாங்க.. கடைசியில ஒன்னுமே வராது என்ற முடிவுக்கு நாம் வந்து விட்டோமா? அல்லது அலட்சியமா? எதுவென சரியாக தெரியவில்லை.

    ஆனால் இழப்பு என்றால் 28 உயிர்களையும் தாண்டி, குடிசைகள் மூழ்கி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 12 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

    300 ஏக்கர் மூழ்கின

    300 ஏக்கர் மூழ்கின

    வடலூர் அருகே பறவனாற்றில் உள்ள கரையில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.. ஆறுகாட்டுத்துறையில் 150 அடி தூரத்துக்கு திடீரென கடல் உள்வாங்கியது. இது இனிமேல் என்ன போகிறதோ தெரியவில்லை. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    விடுதி மாணவர்கள்

    விடுதி மாணவர்கள்

    பட்டுக்கோட்டை ராஜாமடம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி விடுதியில் சி்க்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் எல்லோரும் விடுதி மாணவர்கள் என்பதால் சாப்பாடு இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

    விமான போக்குவரத்து

    விமான போக்குவரத்து

    வேளாங்கண்ணியில் கஜா புயல் வேளாங்கண்ணி ஆலய ஏசுநாதர் சிலையையும் விட்டு வைக்கவில்லை. கோர தாண்டவம் ஆடிய கஜா புயலால் ஏசுநாதர் சிலை பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தில் இருந்து ரயில் போக்குவரத்து வரை முடங்கியுள்ளது.

    அடுத்தடுத்த புயல்கள்

    அடுத்தடுத்த புயல்கள்

    கஜா புயலின் தாக்குதலால் காரைக்கால் திருப்பப்பட்டினம் பகுதியில் கப்பல் கூட தரைதட்டி சிக்கி உள்ளது. அந்த கப்பலில் 10 ஊழியர்கள் வேறு இருந்திருக்கிறார்கள. புயலின் வேகத்தால் இந்த கப்பல் கரைக்கு அடித்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வளவும் முன் எச்சரிக்கை விடுத்தும் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள். இனியும் அடுத்தடுத்த புயல்கள் வரப்போகிறதாம்.

    கவனமாக இருக்க வேண்டும்

    கவனமாக இருக்க வேண்டும்

    இன்னும் கஜா பாதிப்பிலிருந்து மீளவே நமக்கு பல நாட்கள் ஆகும். கரண்ட் கம்பங்களையும் செல்போன் டவர்களையும் சரிசெய்து அதை தூக்கி நிறுத்தவே நாள் ஆகும். அதற்குள் வரப்போகிற புயலை நாம் எப்படி சமாளிப்பது என்பதை இனி கவனமாக கையாள வேண்டும். ஒரு உயிரும் பறிபோகாத வகையில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளிலும் எல்லா அரசு துறையுமே இறங்க வேண்டும்.

    மீம்ஸ்கள்

    மீம்ஸ்கள்

    வானிலை அறிக்கை என்பதை இனியாவது அலட்சியம் செய்யாமல், அது பொதுமக்களின் உயிரை காக்க அடிக்கும் எச்சரிக்கை மணி என்பதை பதிய வைத்து கொள்ள வேண்டும் என்பதே இனி நாம் செய்யும் முதல் வேலையாக இருக்க வேண்டும். புயல்கள் வரும்போது வீராவேச வசனம் பேசுவதையும், மீம்ஸ் போடுவதையும் நாம் ஜாலியாக எடுத்துக் கொண்டாலும் கூட மறுபக்கம், புயல் பாதிப்பிலிருந்து தப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

    English summary
    How can we face with the next Cyclone in Tamilnadu?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X