சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாசில்லாத தீபாவளியை இப்படி பலூன் சரம் வெடித்து தான் கொண்டாடிக்கனும்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மாசில்லாத தீபாவளியை இப்படிதான் கொண்டாடிக்கனும்!-வீடியோ

    சென்னை : மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு டைம் குறித்து கொடுத்ததால் செம காண்டில் இருக்கின்றனர் மக்கள்.

    வழக்கமாக தீபாவளிக்கு பட்டாசு கடையை போடுவதற்கு அனுமதி கேட்டு நீதிமன்றப்படியை ஏறி இறங்குவார்கள் விற்பனையாளர்கள். ஆனால் இந்த ஆண்டு விற்பனையாளர்களுக்கு விற்பனையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் விதமாக அமைந்துவிட்டது உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.

    மாசில்லாத தீபாவளியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவித்தது, பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசே நிர்ணயித்துக்கொள்ளள உத்தரவிட்டது.

    [சரவெடி வெடிக்காதீங்க.. மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்]

    அட்டவணை போட்ட அரசு

    அட்டவணை போட்ட அரசு

    இதனையடுத்து காலை 6 மணி டூ 7 மணி, இரவு 7 மணி டூ 8 மணி என இரண்டு நேரமாக பிரித்து பட்டாசு வெடிக்கும் நேரத்தை டைம்டேபிள் போட்டுக் கொடுத்துள்ளது தமிழக அரசு. தீபாவளின்னாலே அம்மா செய்யும் பலகாரத்தை சாப்பிட்டுவிட்டு பட்டாசு கொளுத்திப் போட்டு அசந்து போவது தான். சொல்லப்போனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகளுக்கு இடையே தீபாவளி என்றால் வைக்கப்படும் போட்டியே யார் வீட்டு வாசலில் பட்டாசு அதிகம் வெடித்து குப்பை போடப்பட்டிருக்கிறது என்பது தான்.

    வருத்தமான செய்தி

    வருத்தமான செய்தி

    ரோட்டில் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் யாராவது வருகிறார்களா என்று பார்த்து பட்டாசு கொளுத்தியது மாறி கடிகாரத்தில் எப்போது 6 மணியாகும், எப்போது சாயங்காலம் 7 மணியாகும் என்று எதிர்பார்த்து பட்டாசு வெடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சற்று வருத்தமளிக்கும் விஷயம் தான்.

    குழந்தைகளை எப்படி சமாளிப்பது

    குழந்தைகளை எப்படி சமாளிப்பது

    நீதிமன்றமும், அரசும் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை கொடுத்துவிட்டது ஆனால் குழந்தைகளிடம் இதனை எப்படி புரிய வைப்பது. அவர்களை எப்படி சமாளிப்பது என்பது தான் பெற்றோருக்கு இருக்கும் சவாலான விஷயமாக இருக்கிறது.

    வேறு தீர்வு வேண்டும்

    வேறு தீர்வு வேண்டும்

    பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், இதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மாசில்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் பட்டாசுக்கான மூலப்பொருளில் இதனை செய்தால் இந்த பிரச்னைக்கு ஒரு வகையில் தீர்வு காணலாம்.

    இப்படி கொண்டாடிக்கலாம்

    எல்லோரும் சொல்ற மாதிரி மாசில்லாத தீபாவளிக் கொண்டாடனும்னா இப்படித் தான் கொண்டாடனும். எப்படின்னு பாக்குறீங்களா? பலூன்களை ஊதி சரம் போல கோர்த்து நூலை சரசரவென இழுத்து வெடிக்கச் செய்தால் படபடவென வெடிக்கும் சத்தத்தை கேட்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.மாசில்லாமல் தீபாவளியைக் கொண்டாட இதைவிட சிறந்த ஐடியா எதுவும் இருக்க முடியாது.

    English summary
    How to celebrate pollution free diwali, a video cracking ballons is viral in socail media as SC given 2 hours time for firing crackers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X