சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இயற்கையின் அதிசயம்.. கருணை.. நூலிழையில் தப்பிய சென்னை.. ஒடிசாவை புரட்டிப்போடும் ஃபனி!

மிக சிறிய காலநிலை மாற்றம் காரணமாக மிக மோசமான ஃபனி புயலில் இருந்து சென்னை தற்போது தப்பித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Cyclone Fani : ஃபானி புயல்.. 20 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு இருக்கும்.. எச்சரிக்கை- வீடியோ

    சென்னை: மிக சிறிய காலநிலை மாற்றம் காரணமாக மிக மோசமான ஃபனி புயலில் இருந்து சென்னை தற்போது தப்பித்து இருக்கிறது. இந்த புயல் சென்னையை தாக்கி இருந்தால் மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    கடந்த வாரம்தான் ஃபனி வங்கக்கடலில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அப்போதே இது புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டது.

    அதேபோல் இந்த புயல் சென்னையை அல்லது தமிழகத்தின் எதாவது ஒரு பகுதியை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் காற்றழுத்த தாழ்வு நிலையும் வலுவடைந்து கொண்டே வந்தது.

    10 லட்சம் பேர் வெளியேற்றம்.. 220 கிமீ வேகம்.. 43 வருடத்தில் வீசாத அசுர புயலாக மாறியது ஃபனி! 10 லட்சம் பேர் வெளியேற்றம்.. 220 கிமீ வேகம்.. 43 வருடத்தில் வீசாத அசுர புயலாக மாறியது ஃபனி!

    புயலாக மாறியது

    இந்த நிலையில் இந்த வாரம் இந்த தாழ்வு நிலை மிக வலுவடைந்து புயலாக மாறியது. சென்னை அருகே இந்த புயல் அதி தீவிரமாக கரையை கடக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வந்தது.

    ஆனால் ஒடிசா

    ஆனால் ஒடிசா

    ஆனால் இந்த புயல் சென்னையை நோக்கி வராமல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்ல தொடங்கியது. மொத்தமாக ரைட் எடுத்து வளைந்து செல்ல தொடங்கியது இந்த புயல். சென்னையை தாக்காமல் இது ஒடிஸாவை தாக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறினார்கள்.

     மிக மோசமான வெயில்

    மிக மோசமான வெயில்

    இந்த புயல் சென்னையை நெருங்கிவிட்டு வேறு இடம் நோக்கி நகர்வதால் சென்னை பாதிக்க போகிறது. சென்னைக்கு பெய்ய வேண்டிய மழையும் இனி பெய்யாது. சென்னையில் கடுமையான வெயில் அடிக்க போகிறது, கடுமையான வறட்சி நிலவ போகிறது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மிக மோசம்

    மிக மோசம்

    ஆனால் இந்த புயல் சென்னையை தாக்கி இருந்தால் வரலாற்றில் இல்லாத மிக மோசமான புயலாக, பேரிடராக மாறி இருக்கும். ஆம் இந்த புயல் ஒடிசாவை 220 கிமீ வேகத்தில் தாக்க இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சென்னையை இதே வேகத்தில் புயல் தாக்கி இருந்தால், பலரின் வாழ்வாதாரம் மொத்தமாக நாசமாகி இருக்கும். பல கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும். பெரிய பேரழிவில் இருந்து சென்னை தப்பித்து இருக்கிறது.

    எப்படி நடந்தது

    இந்த புயல் திசை மாறி செல்ல வங்கக்கடலில் நிலவிய சிறிய வானிலை மாற்றம்தான் காரணம் என்கிறார்கள். அங்கு நிலவிய எதிர் காற்றழுத்தம் இந்த புயலை கொஞ்சம் கொஞ்சமாக திசை மாற்றி இருக்கிறது. அதனால்தான் சென்னையை நோக்கி வந்த புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்து உள்ளது. இது இயற்கையின் அதிசயம்.. சென்னைக்கு இயற்கை காட்டிய கருணை என்றுதான் கூறுகிறார்கள்.

    English summary
    This is How Chennai gets escaped from worst Fani Cyclone Storm hit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X