சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்கூட்டியே தேர்தல் தேதியைலீக் செய்து விட்டாரா முதல்வர்.. திடீர் சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தல் தேதியை முன்கூட்டியே கூறிவிட்டாரா முதல்வர் ?

    சென்னை: லோக்சபா தேர்தல் தேதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே வெளியிட்டு விட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

    தேர்தல் தேதி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை என பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி பிரதமரின் நிகழ்சிகள் முடியும்வரை தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது இது ஜனநாயகத்தை கேலிகூத்தாக மாற்றும் செயல் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

    how cm knows about the poll dates well in advance

    இந்த நிலையில் சேலத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் மாதம் 11 அல்லது 12 ம் தேதி தேர்தல் அறவிப்பு வந்து விடும். அதன் பிறகு ஒரே மாதத்தில் தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் அதுவும் ஏப்ரல் 11 அல்லது 12 ம் தேதிகளில் நடைபெறும் என்று கூறுகிறார்.

    தூத்துக்குடிக்கு என்ன செய்வீங்க.. சொல்லுங்க.. கனிமொழியிடம் இன்டர்வியூ நடத்திய ஸ்டாலின்!தூத்துக்குடிக்கு என்ன செய்வீங்க.. சொல்லுங்க.. கனிமொழியிடம் இன்டர்வியூ நடத்திய ஸ்டாலின்!

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 நாட்கள் அதாவது ஒரு மாதம் மட்டுமே நமக்கு இருக்கிறது. ஆகவே காலம் கடத்தாமல் ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல் நமக்கு கிடைக்க அனைவரும் உழைக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார் முதல்வர்.

    [லோக்சபா தேர்தல் 2019]

    இதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. தேர்தல் ஆணையம் தன்னிச்சையான ஒரு அமைப்பு. மத்திய அரசோ அல்லது மாநில அரசோ அதை கட்டுப்படுத்த இயலாது. அப்படியெனில் தனக்கு கிடைத்த தகவலின்படி ஒரு முதலமைச்சர் தேர்தல் தேதி அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வரும் என்று எப்படி கூறுகிறார்? அடுத்ததாக ஒரே மாதத்தில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்று முதல்வருக்கு எப்படி தெரியும்?

    தமிழகத்தில்தான் முதல்கட்டமாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று ஏதேனும் விதிமுறைகள் தேர்தல் ஆணையத்தில் உள்ளதா என்பது தெரியவில்லை. ஆனால் கடந்த 7ம் தேதி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தேர்தல் ஆணையத்திற்கு சென்று தமிழகத்தில் ஒரே கட்டமாக முதல் கட்டத்திலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது என்பதற்கான எந்த ஒப்புதலையும் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. அப்படியிருக்கும்போது முதல்வர் எப்படி தனது தொண்டர்கள் மத்தியில் தேர்தல் அறிவிப்பு வரும் தேதியையும் அதன் பின்னர் ஒரே மாதம்தான் இருக்கிறது தேர்தலுக்கு என்று தேர்தல் நடைபெறவுள்ள தேதியையும் எப்படி அறிவித்தார்?

    கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலுக்கு முன்பும் பாஜக பிரமுகர் ஒருவர் தேர்தல் இந்த தேதியில்தான் நடைபெறும் என்று சமூக வலைதளத்தில் தேர்தல் தேதியை பகிர்ந்திருந்தார். அவருக்கு தேர்தல் தேதிகள் குறித்த விவரம் எப்படி தெரியும் என்ற கேள்விக்கே இன்னும் விடை தெரியாத சூழலில் ஒரு மாநிலத்தின் முதல்வரே தனக்கு கிடைத்த தகவலின்படி திங்கள்கிழமை தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என்றும் அடுத்து 30 நாள்களில் தேர்தல் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று கூறுகிறார். இதை அவர் தனது கட்சி தொண்டர்களை தேர்தலுக்கு தயார் படுத்த கூறுகிறார் என்றால் மக்களால் தேர்வு செய்யப்பட ஒரு மக்கள் பிரதிநிதி இவ்வாறு பொது இடத்தில் வைத்து கூறலாமா என்ற கேள்வி எழுகிறது.

    தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படும் ஒரு சுயேச்சையான அமைப்பு என்றால் ஆளும் அரசுகளுக்கு மட்டும் தகவல்களை பரிமாறிக் கொள்கிறதா என்ற கேள்வியும் இந்நேரத்தில் எழுகிறது. இந்த நிலையில் இன்று மாலை தேர்தல் தேதியை தேர்தல் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    English summary
    CM Edappadi Palanisamy has predicted the LS poll dates and it has created a controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X