சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசோக்நகரில்.. நைட் 1 மணிக்கு.. நிவேதா பின்னாடியே சென்ற ஓலா பைக் டிரைவர்.. அப்பறம் என்னாச்சு?

ஓலா பைக் டிரைவரை சென்னை போலீசார் கைது செய்து விசாரிக்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: நைட் நேரம் 1 மணிக்கு, நிவேதா பின்னாடியே சென்றுள்ளார் ஓலா பைக் டிரைவர் ஒருவர்.. அதன்பிறகு என்ன நடந்தது?

சென்னை ஆதம்பாக்கம் அடுத்த நியூ காலனி பகுதியில் வசித்து வருபவர் நிவேதா... இவர் ஒரு பைக் சாம்பியன்.. 2 முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையும்கூட.

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

இவர் மகளிர் மோட்டார் சைக்கிள் கிளப் என்ற நிறுவனத்தையும் சொந்தமாக நடத்தி வருகிறார். மேலும், சோஷியல் மீடியாவிலும் எப்போதுமே ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். இவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ்களும் உண்டு.

 திருமங்கலம்

திருமங்கலம்

கடந்த 11ம் தேதி இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகார் தந்திருந்தார்.. அதில், நைட் நேரம், டூவீலரில் திருமங்கலம் சென்றுவிட்டு, அண்ணா நகரில் இருந்து வேலையையும் முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை அணிந்த மர்ம நபர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து இவரை பின்தொடர்ந்து வந்தாராம்.. ஒல்லியான உருவம் கொண்ட அந்த, நபர் ஆலந்தூர் வரை பின்னாடியே வந்துள்ளார்.. இதனால் பயந்துபோன அந்த பெண், வீட்டுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

 இருட்டு பகுதி

இருட்டு பகுதி

அதற்குள் அந்த நபரை காணோம்.. அவர் திரும்பி சென்றுவிட்டார் என்று நினைத்து கொண்டு, மீண்டும் வீட்டுக்கு கிளம்பியிருக்கிறார்.. ஆனால் மீண்டும் அந்த நபர் பின்னாடியே வந்தாராம்.. நைட் 1 மணிக்கு கருணீகர் தெரு, லக்கி கல்யாண மண்டபம் பகுதியை கடந்து செல்லும்போது, திடீரென அந்த மர்ம நபர் இந்த பெண்ணிடம் சென்று தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததுடன், செல்போனையும் பறிக்க முயன்றுள்ளார்.. இதற்கு நடவடிக்கை வேண்டும் என்று போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், காவல்துறைக்கும் தன்னுடைய ட்வீட்டை டேக் செய்திருந்தார் அந்த பெண்..

 ஆதாரங்கள்

ஆதாரங்கள்

இந்த புகாருக்கு நடவடிக்கை எடுப்பதாக சென்னை காவல் துறையும் ட்விட்டரிலேயே பதிலளித்திருந்தது. உடனடியாக, சம்பந்தப்பட்ட நபரை தேடும் வேலையிலும் இறங்கியது.. ஆனால், அவரை பற்றின எந்த க்ளுவும் கிடைக்கவில்லை.. எனவே, சிசிடிவி ஆதாரங்களை மட்டுமே நம்பி போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து, அந்த நபரின் அடையாளங்களை சேகரித்தனர்.. அப்போதுதான் பிடிபட்டவர்தான் சந்திரகாசன் என்பவர்.. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்..

 இரும்பு கம்பெனி

இரும்பு கம்பெனி

இவரை பிடித்து விசாரித்தபோது, பாரிமுனையில் ஒரு இரும்பு கம்பெனியில் வேலை பார்க்கிறாராம்.. நைட் நேரங்களில் ஓலா பைக் ஓட்டி வந்துள்ளார்.. சம்பவத்தன்று, கஸ்டமர் ஒருவரை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இறக்கி விட்டுவிட்டு, வீட்டுக்கு செல்லும்போதுதான், அசோக்நகர் பக்கத்தில் நிவேதா ஜெஸிகாவை பார்த்து, அவர் பின்னாடியே சென்றது தெரியவந்தது.. இப்போது போலீசார் இவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

English summary
how did chennai police arrest ola bike driver on national motor racer issue ஓலா பைக் டிரைவரை சென்னை போலீசார் கைது செய்து விசாரிக்கிறார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X