சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜ்யசபா எம்பி சீட்டை தொடர்ந்து ஜிகே வாசனுக்கு அடுத்த சூப்பர் வாய்ப்பு? மத்திய அமைச்சராகிறாரா?

Google Oneindia Tamil News

சென்னை: ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜிகே வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியிடம் நன்மதிப்பு உள்ளதாலேயே வாசனுக்கு ராஜ்யசபா எம்பி சீட் கிடைத்தாக சொல்லப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்தன. இதில் பாமகவுக்கு 7 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்பட்டது. இதன்படி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. வரும் 26ம் தேதி இதற்கான தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பில் 3 எம்பிக்களை போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

ராஜ்யசபா சீட்

ராஜ்யசபா சீட்

அதிமுகவில் எம்பி பதவியை புடிக்க மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவியது. இதுஒருபுறம் எனில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவும் ராஜ்யசபா எம்பி கேட்டு அதிமுகவிடம் வெளிப்படையாக போர்க்கொடிஉயர்த்தியது. தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதீஷ் முதல்வரை சந்தித்து பேசினார். ஆனால் முதல்வர் வேறு ஒரு சந்தர்பத்தில் பார்ப்போம் என்ற ரீதியில் சமாதானம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராஜ்சபா எம்பி சீட்

ராஜ்சபா எம்பி சீட்

இதனிடையே தமாகா தலைவர் ஜிகே வாசன் பாஜகவின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு காய் நகர்த்தி வந்தார். இதன்படி அதிமுக சார்பில் போட்டியிட ஜிகே வாசனுக்கு சீட் கிடைத்துள்ளது. இதேபோல் அதிமுகவின் மூத்த தலைவர்களான தம்பி துரை மற்றும் கேபி முனுசாமி ஆகியோருக்கும் சீட் கிடைத்துள்ளது.

எப்படி கிடைத்தது

எப்படி கிடைத்தது

ஜிகே வாசனுக்கு சீட் தரப்பட்டது எப்படி என்பது அதிமுக கட்சியினருக்கே புரியாத புதிராக இருந்தது. ஏனெனில் கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு அழுத்தம் கொடுத்தார்கள். அதையும் மீறி ஜிகே வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டதன் பின்னணி பாஜக மேலிடம் இருப்பது தெரியவந்ததும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

ஏன் கொடுத்தார்கள்

ஏன் கொடுத்தார்கள்

கூட்டணி கட்சிகளிடம் அணுசரணையாக நடந்து கொள்வதுடன் பாஜக மேலிட தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பவர் ஜிகே வாசன். மூப்பனாரின் மகன் என்பதால் பாஜக மேலிடம் அவர் மீது தனி பாசம் வைத்திருந்தது. அவரது பாஜகவில் இணைக்கவும் பாஜக மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே அமித்ஷாவின் உத்தரவின் பேரில் அதிமுக தலைமை ஜிகே வாசனுக்கு எம்பி சீட் வழங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாஜகவில் இணைகிறாரா

பாஜகவில் இணைகிறாரா

இந்நிலையில் எம்பி சீட் வழங்கப்பட்டுள்ள ஜிகே வாசன் பாஜகவுக்கு வெகுவிரைவில் இணையக்கூடும் என்று கூறப்படும் நிலையில், அவர் மத்திய அமைச்சராகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் பாஜக மேலிட தலைவர்களின் முழு ஆதரவு இருப்பதால் மத்திய அமைச்சராக ஜிகே வாசன் பதவி ஏற்கலாம் என்கிறார்கள். ஜிகே வாசன் ஏற்கனவே 2 முறை ராஜ்யசபா எம்பியாக இருந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

English summary
how gk vasan get rajya sabha mp seat from aiadmk, the reason behind amit shah and bjp head?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X