சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபரேஷன் சக்ஸஸ் என எச். ராஜா டிவிட் செய்தது எப்படி? அடியாட்கள் வந்தது ஏன்? சந்தேகம் எழுப்பும் சுப.வீ

நேற்று நெல்லை கண்ணன் கைது செய்யப்படும் முன் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ஆபரேஷன் சக்ஸஸ் என்று போட்டது எப்படி என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீ

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் கைது - வீடியோ

    சென்னை: நேற்று நெல்லை கண்ணன் கைது செய்யப்படும் முன் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ஆபரேஷன் சக்ஸஸ் என்று போட்டது எப்படி என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி நடந்த போராட்டத்தில் தமிழறிஞர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். இதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து நெல்லை கண்ணன் அவமதிப்பாக, சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசினார்.

    இதற்கு பாஜக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாஜகவின் இந்த போராட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கலந்து கொண்டார்.

     "சோலி".. இது லோக்கல் லேங்குவேஜ்.. நெல்லை கண்ணன் தப்பான அர்த்தத்தில் பேசலை.. ஆதரவாளர்கள்

    கைது செய்தனர்

    கைது செய்தனர்

    இதையடுத்து நேற்று இரவு நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக எச். ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ஆபரேஷன் சக்ஸஸ் என்று போட்டார். போலீஸ் கைது செய்யும் முன்பே எச். ராஜா இதை போஸ்ட் செய்து இருந்தார். இதைத்தான் தற்போது திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    யார் இவர்

    யார் இவர்

    திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் செய்துள்ள டிவிட்டில், தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தவர், திமுகவிற்கு எதிராகப் பல மேடைகளில் பேசியவர், ஆன்மிகம், பக்தி, சாதிக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றவர் - இவர்தான் நெல்லை கண்ணன். ஆனாலும், நேற்று இரவு அவரைக் காவல் துறையினர், கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வண்டியில் ஏற்றியபோது, என் ரத்தம் கொதித்தது.

    என்ன போஸ்ட்

    என்ன போஸ்ட்

    ஏன்? அவர் ஒரு தமிழர். தமிழ் இலக்கியங்களில் மிகப் பெரும் புலமை வாய்ந்தவர். சிறந்த சிந்தனையாளர். மணிக்கணக்கில் சலிப்பின்றிப் பேசக்கூடிய சொற்பொழிவாளர்.

    இத்தனை தகுதிகள் இருப்பதால், அவர் மோடி, அமித்ஷா பற்றிப் பேசியது நியாயம் என்று நான் கூற வரவில்லை. அது பொறுப்பற்ற பேச்சு! அதுவும் இஸ்லாமியர்கள் மேடையில் அவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று நண்பர்கள் சிலர் கூறுகின்றனர். நான் அப்படிக் கருதவில்லை. எந்த மேடையிலும் அப்படிப் பேசக்கூடாது என்பதே சரி.

    உரைகள் எப்படி

    உரைகள் எப்படி

    அவரது உரைகள் பலவற்றை நான் நேரிலும், வலையொளி வழியாகவும் கேட்டுள்ளேன். நண்பர்கள் அறிவுமதி, பழனி பாரதி ஆகியோர் அவர் குறித்து வியந்து சொல்வதையும் கேட்டுள்ளேன்.

    அவர் நாவில் தமிழ் விளையாடும். இலக்கிய மேற்கோள்கள் அருவியெனக் கொட்டும். அத்தனை பயிற்சி! அத்தனை தோய்வு! 'கேட்ட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்" அவருடையது! 'தான்' என்கிற பெருமிதம் அவரிடத்தில் உண்டுதான். என்றாலும், தகுதி வாய்ந்த தமிழ் அறிவாளி அவர்!

    விமர்சனம் செய்தார்

    விமர்சனம் செய்தார்

    எனினும், நான் உயிராய் நேசிக்கும் கருணாநிதி குறித்து அவர் சில நேரங்களில் பேசியுள்ள உரைகள் என்னைச் சினம் கொள்ள வைத்துள்ளன. நான் விரும்பும் தலைவர் ஒருவரை எல்லோரும் விரும்ப வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை. நானும் அப்படி எதிர்பார்ப்பவன் இல்லை. அனால், உரிய மதிப்புடன்தான் கருணாநிதி போன்ற தலைவர்களை விமர்சிக்க வேண்டும் என்று மட்டுமே சொல்ல வருகிறேன். .

    பேசினார்

    பேசினார்

    கருணாநிதி எதிர்ப்பு ஒருபுறமிருக்கட்டும். வேறு பல வகையிலும் கூட, அவர்கள் விரும்பும் வகையில் செய்திகளைச் சொல்லக் கூடியவர்தான் அவர். பக்தி இலக்கியங்களை, பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட விளக்கும் ஆற்றலாளர். பிறகு ஏன் அவரிடம் ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் இவ்வளவு வன்மம் காட்டினர்?

    கைது இல்லை

    கைது இல்லை

    இப்படிப் பேசியவர்கள் எல்லோரும் இந்நாட்டில் தண்டிக்கப்பட்டு விட்டார்களா?வேதாந்தி என்பர் தலைவர் கருணாநிதி தலையை வெட்டி வா என்று வெளிப்படையாகப் பேசியபோது, அவர் கைது செய்யப்பட்டாரா? கல்லை விட்டு எறிந்தால், மாணவர்களின் விடுதிக்குள் குண்டுகள் வந்து விழுகும் என்று ஹெச்.ராஜா வன்முறையாகப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டாரா?

    ஏன் இப்படி செய்கிறார்கள்

    ஏன் இப்படி செய்கிறார்கள்

    ஒரு பெண் ஊடகவியலாளரைக் கீழ்த்தரமாகப் பேசியதற்காக நடிகர் எஸ்.வி.சேகர் இப்போது சிறையிலா இருக்கின்றார்? கோயிலுக்குள் அர்ச்சனை செய்ய வந்த ஒரு பெண்ணை கைநீட்டி அடித்த தில்லை திடசிதர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

    அடியாட்கள் வந்தது

    அடியாட்கள் வந்தது

    அவர்களுக்கு ஒரு நீதி, நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதியா? .சரி, அவரைக் கைது செய்யக் காவல்துறை வந்தபோது, அவர்களுடன், பாஜகவின் அடியாட்களும் வந்தது எப்படி? அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே, 'ஆபரேஷன் சக்ஸஸ்' என்று ஹெச். ராஜா ட்வீட் செய்தது எப்படி?

    இனியாவது, தன் நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை அறிஞர் நெல்லை கண்ணனும் அறிந்து கொள்வார் என்று நம்புகிறேன். ஆம், "கேட்டினும் உண்டு ஓர் உறுதி!", என்று சுப வீரபாண்டியன் தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    How did H Raja know about the Nellai Kannan arrest asks Suba Veerapandiyan in facebook.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X