சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஆ என பார்த்த "ஆர்ஆர்" பவுலர்! ஸ்டன் ஆகி போக மைதானம்.. குறுக்கே வந்த பட்லர்! கடைசியில் செம ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஸ்டன் ஆக செய்தது.

Recommended Video

    IPL 2022 முதல் அணியாக Final சென்ற Gujarat Titans | #Cricket

    2022 ஐபிஎல் தொடரில் பலரும் எதிர்பார்த்தபடியே குஜராத் அணி பைனலுக்கு சென்றுள்ளது. லீக் ஆட்டங்களில் 14 போட்டிகளில் 10ல் வென்று டாப்பில் இருந்ததும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான புதிய குஜராத் அணி.

    இதனால் அந்த அணி ப்ளே ஆப் செல்வது உறுதியாகிவிட்டது. ஆனால் பைனல் செல்லுமா என்ற சந்தேகம் இருந்தது. மாறாக நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி வென்றுள்ளது.

    எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? - 'சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்'எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? - 'சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்'

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான்

    நேற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் ஆடியது. ஜெய்ஸ்வால் சரியாக ஆடாத நிலையில் பட்லர் 56 பந்தில் 2 சிக்ஸ், 12 பவுண்டரி என்று 89 ரன்கள் எடுத்தார். அதேபோல் கேப்டன் சஞ்சு சாம்சன் 5 பவுண்டரி, 3 சிக்ஸ் என்று 26 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தான் அணி 200 ரன்களை எப்படியும் எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    குஜராத் ஆட்டம் மாறியது

    குஜராத் ஆட்டம் மாறியது

    ஆனால் 188-6 எடுத்த ராஜஸ்தான் குஜராத் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. குஜராத் அணியும் தொடக்கத்தில் இருந்தே பக்கா இண்டெட்டுடன் ஆடியது. சாகா அவுட் ஆனாலும், கில், மேத்யூவேட் ஆகியோர் தலா 35 ரன்களை எடுத்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றனர். கேப்டன் பாண்டியா வெறும் 27 பந்தில் 5 பவுண்டரி உட்பட 40 ரன்கள் எடுத்தார். ஆனால் அதன்பின் வாட்ச் மில்லர்தான் ஆட்டத்தை மாற்றினார்.

    குஜராத் வெற்றி

    குஜராத் வெற்றி

    வெறும் 38 பந்தில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி என்று மொத்தமாக ஆட்டத்தை இவர் புரட்டி போட்டார். மொத்தம் 68 ரன்களை இவர் எடுத்தார். இந்த போட்டியில் நன்றாக ஆடிக்கொண்டு இருந்த மேத்யூ வேடை ஒபைட் மெக்காய் அவுட் செய்தார். மேத்யூ 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராஜஸ்தான் பவுலர் ஒபைட் மெக்காய் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்றார் . பந்து லாங்க் ஆன் திசைக்கு சென்றது.

    சுவாரசிய சம்பவம்

    சுவாரசிய சம்பவம்

    பந்து கண்டிப்பாக சிக்ஸ் என்று தெரிந்ததும் ஒபைட் மெக்காய் வாயை பிளந்து ஆ ஆ என்று வானத்தை பார்த்துக்கொண்டு இருந்தார். சிக்ஸ் போய்விட்டதே என்று பார்த்துக்கொண்டு இருந்தார். தலையை தொங்க போட்டுக்கொண்டு அப்படியே ஒபைட் மெக்காய் அப்படியே நடந்து சென்றார். ஆனால் திடீரென குறுக்கே புகுந்த பட்லர் லாங்க் ஆன் திசையில் பந்தை அப்படியே தாவி லாவகமாக கேட்ச் பிடித்த மேத்யூ வேடை அவுட் செய்தார்.

    மோசமான ஓவர்

    மோசமான ஓவர்

    ஒபைட் மெக்காய் இதை திரும்பி பார்த்து நம்ப முடியாமல் திகைத்து நின்றார். மைதானத்தில் இருந்த பலரும் இதை பார்த்து ஸ்டன் ஆனார்கள். இதனால் ஆட்டம் நேற்று ராஜஸ்தான் வசம் வந்தது. ஆனால் அதே ஓவரில் 2 வைட், 1 நோ பால் உட்பட 17 ரன்களை ஒபைட் மெக்காய் கொடுத்தார். இதனால் அதே ஓவரில் மீண்டும் குஜராத் பார்மிற்கு வந்தது. அந்த 10வது ஓவரில் இருந்தே ஆட்டம் குஜராத் வசம்தான் இருந்தது. பின்னர் கடைசி ஓவரில் மில்லர் ஹாட் டிரிக் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

    English summary
    How did Obed McCoy over for Rajasthan against Gujarat turn the match in IPL 2022 playoff? நேற்று 2022 ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகர்களை ஸ்டன் ஆக செய்தது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X