சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி திணிப்பு பற்றிய ரஜினிகாந்த் கருத்து | Rajini oppose Hindi Imposition

    சென்னை: 'மாயா மாயா., எல்லாம் மாயா.. சாயா சாயா.. எல்லாம் சாயா..தாமரை இல்லை நீர் போல் நீ ஒட்டி ஒட்டாமல் இரு' என பாபா படத்தில் ரஜினி பாடுவார். அப்படித்தான் ரஜினி அரசியலில் எல்லா விஷயத்திலும் தாமரை இலையில் நீர் போல் ஒட்டி ஒட்டாமல் இருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதை இப்போது பாரத்திடுவோம்.

    சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனஓட்டத்தையும் அறிந்து படத்தின் கதையை தேர்ந்தெடுப்பபதில் வல்லவர் ரஜினி. அதனால் தான் ரஜினியை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஸ்டைலும் அழகான நடிப்பும் அவருக்கு மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் படத்தை வாங்கி கொடுத்தது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

    ரஜினி சினிமாவில் மக்களுக்கு நடிப்பால் பிடிக்கும் என்றால், பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் எல்லோரிடமும் எளிமை காட்டி அன்பு காட்டி பழகுவது தோள் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளால் ரஜினியை சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

    சினிமா பாணி

    சினிமா பாணி

    இப்படி எல்லோருக்கும் பிடித்த நடிகராக, கலைஞனாக, மனிதாக பார்க்கப்படும் ரஜினி தன்னுடைய இந்த குணத்தை அப்படியே அரசியலிலும் காட்டுவதாக தெரிகிறது.

    தமிழகத்தில் இந்தி மட்டுமல்ல.. எதையும் திணிக்க முடியாது.. வாய் திறந்தார் ரஜினிகாந்த்தமிழகத்தில் இந்தி மட்டுமல்ல.. எதையும் திணிக்க முடியாது.. வாய் திறந்தார் ரஜினிகாந்த்

    இந்தியை திணிக்க கூடாது

    இந்தியை திணிக்க கூடாது

    அதன் வெளிப்பாடு தான் இன்றைக்கு இந்தி திணிப்புக்கு எதிராக சொன்ன கருத்து. ரஜினி இதுகுறித்து கூறுகையில், எந்த ஒரு நாட்டுக்கும் பொதுவான மொழி இருந்தால் நல்லது. ஆனால் துரதிஷ்டவசமாக அப்படி பொதுமொழியை கொண்டுவர முடியாது. எந்த மொழியையும் திணிக்க கூடாது. தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வட இந்தியா, தென்னிந்தியா எனஎங்குமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார்.

    எங்க வீட்டு பிள்ளை

    எங்க வீட்டு பிள்ளை

    பாஜக மற்றும் திமுக, அதிமுக என அனைத்து தரப்புக்கும் பாதகம் இல்லாமல் இப்படி ஒரு கருத்து கூறுவதன் மூலம் அனைவருக்கும் நல்ல பிள்ளையாக, அதாவது நம்ம வீட்டு பிள்ளை, எங்க வீட்டு பிள்ளை என எல்லாரும் கொண்டாடும் வகையில் அரசியலில் ரஜினி இருக்க விரும்பவுதாக தெரிகிறது. அல்லது அரசியல் எதிர்காலம் கருதி கருத்துக்களை கவனமாக வெளிப்படுத்துவதாக தெரிகிறது.

    கடுகளவும் விமர்சிக்க மாட்டார்

    கடுகளவும் விமர்சிக்க மாட்டார்

    அவர் இந்தி திணப்பு விஷயத்தில் மட்டுமில்லை.. எந்த பிரச்சனையில் கருத்து தெரிவித்தாலும் யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார். அதனால் தான் தன்னை கடுமையாக விமர்சிப்பவர்களை கூட அவர்இதுவரை விமர்சித்தது இல்லை. அமைதியே பதிலாக அளித்து வந்துள்ளார்.

     ரஜினி அரசியல் யுக்தி

    ரஜினி அரசியல் யுக்தி

    இதன் மூலம் அரசியல் கட்சி ஆரம்பித்த உடன் தமிழக அரசியலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவன் என்று மக்களை நம்ப வைக்க முடியும் என ரஜினி விரும்புவதாக தெரிகிறது. சினிமாவில் கடைபிடித்த அதே யுக்தியை அரசியலிலும் ரஜினி கடைபிடிப்பது உறுதியாகிறது.

    போரில் போராடுவது எப்போது

    போரில் போராடுவது எப்போது

    ஆனால் இந்த யுக்தி கைகொடுக்குமா என்பது அவர் கட்சி ஆரம்பித்தால் தான் தெரியும். கட்சி ஆரம்பித்த பின்னர் அவர் நிச்சயம் பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக ஆளும் கடசியோ எதிர்க்கட்சிக்கு எதிராக வலிமையாக எதிர்ப்பை பதிவு செய்து போராட வேண்டியதிருக்கும். ரஜினி காலா படத்தில் செய்த விஷயங்களை நிஜத்தில் நிச்சயம் செய்ய வேண்டியதிருக்கும். அப்படி ஒரு நாள் ரஜினி "வேங்க மகன் ஒத்தையில் நிக்கேன்.. வாங்களே இப்ப.. " என்று அரசியலில் இறங்கும் நாள் தான் ரஜினி உண்மையில் அரசியலுக்கு வரும்நாள் ஆகும். அப்படி வரும் வரை காத்திருப்போம்.

    English summary
    how did rajini politics works in tamilnadu, rajini what doing in politics
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X