"அர்த்த ராத்திரி" அக்கிரமம்.. மண்ணெண்ணெய் வாங்க போன பொண்டாட்டிகள்.. கரெக்ட்டா வந்த காதலன்கள்.. அடடா
சென்னை: இலங்கையில் எரிபொருள் பிரச்சனை தலைதூக்கி வரும் நிலையில், குடும்ப ரீதியான மற்றும் சமூக பிரச்சனையும் வெடித்து கிளம்பி உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது...
அதிலும் எரிபொருள் கிடைக்காமல் மக்கள் சொல்ல முடியாத அவதியில் உள்ளனர்.. எனவே, இலங்கையின் எரிபொருட்கள் தேவைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது...
முடங்கியது இலங்கை- பொதுமக்களுக்கு 2 வாரத்துக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அதிரடி தடை அமல்!

மண்ணெண்ணெய்
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்யை வாங்கி கொள்வதற்காக, அம்மக்கள் கால்கடுக்க பல நாட்கள் நிற்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.. இதற்காக இரவு, பகல் என்றும் பாராமல், நீண்ட வரிசையில் மக்கள் காத்து கிடக்கிறார்கள்... அப்படி பெட்ரோல் வாங்க சென்றபோதுதான், ஒரு முக்கிய சம்பவம் ஒன்று சிலாபம் பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணெயை வாங்குவதற்காக, நைட் நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார்..

ஷாக்
நீண்ட வரிசை இருந்ததால், அந்த பெண்ணும் வரிசையில் போய் நின்று கொண்டார்.. ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்தில் அந்த பெண்ணை காணோம்.. கள்ளக்காதலனுடன் அங்கிருந்து ஓடிவிட்டார்.. இந்த விஷயம் தெரிந்து அந்த கணவன் கொந்தளித்தார்.. மனைவியை இழுத்துக் கொண்டு ஓடிய அந்த இளைஞரை விரட்டி பிடித்து தாக்கினார்.. இதில், அந்த இளைஞர் படுகாயமடைந்தார்.அதேபோல, இன்னொரு இடத்திலும், இதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது..

ரெஸ்ட்
பெட்ரோல் வாங்குவதற்காக, ஒருவர் வரிசையில் காத்து கொண்டிருந்தார்.. அப்போது அவர் மனைவி அங்கு வந்துள்ளார்.. "ரொம்ப நேரமாக வரிசையில் நிற்கிறீங்களே, வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.. உங்களுக்கு பதில் நான் வரிசையில் நிற்கிறேன்" என்று தந்திரமாக பேசியுள்ளார்.. உடனே அவரது கணவரும், மனைவி சொன்னதை நம்பி வீட்டுக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து, வீட்டுக்குச் சென்ற கணவன், மறுபடியும் மனைவியை தேடி வந்தார்.. ஆனால், வரிசையில் மனைவியை காணவில்லை..

களேபரம்
தேடி தேடி பார்த்தபோதுதான், பெட்ரோல் வாங்க வந்த இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்து கொந்தளித்து போய்விட்டார்.. அங்கேயே, அப்போதே அந்த இளைஞரையும், மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.. இந்த களேபரத்தில், கடைசிவரை இவர்கள் பெட்ரோலும் வாங்கவில்லை.. மண்ணெண்ணெயும் வாங்கவில்லை.. போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் சென்றுள்ளது.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. ஏற்கனவே இப்படித்தான் ஒரு பெண், கள்ளக்காலனுடன் இரவு நேரத்தில் ஓட்டம் பிடித்தாராம்.. இப்படி 3 சம்பவங்கள் அங்கு நடந்துள்ளது.

நள்ளிரவு
அதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனையானது, சமூக ரீதியான பிரச்சினையாக மாறி கொண்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது..! இந்நிலையில், இலங்கையில் 2 வார காலத்துக்கு சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி என அத்தியாவசியப் பணிகளுக்குதான் பெட்ரோல், டீசல் விநியோகிக்கப்படும் என்றும், தனியார் வாகனங்கள் எதற்கும் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தடையானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது... அதனால், ஒட்டுமொத்த இலங்கையே முடங்கி காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.