India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முதலிரவு".. ரூமில் நுழைந்ததுமே.. "வீடியோ" எடுத்து காட்டிய கல்யாண பெண்.. தெறித்து ஓடிய மாப்பிள்ளை..!

Google Oneindia Tamil News

சென்னை: "முதலிரவு ரூமுக்குள் நுழைந்ததுமே, கல்யாண பெண் கேட்டதை பார்த்து, மாப்பிள்ளை அதிர்ந்துவிட்டார்.

சென்னை பள்ளிகரணை பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன்.. 32 வயதாகிறது.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதால், நீண்ட காலமாகவே பெண் பார்த்து வந்துள்ளார்.

இவருக்கு புரோக்கர் மகேஷ் அறிமுகமாகி உள்ளார்.. இவர் சேலத்தை சேர்ந்தவர்.. தமிழ்வாணன் பெண் தேடுவதை அறிந்து, அவரை தொடர்பு கொண்டு பேசினார்.. தனக்கு தெரிந்த பெண் ஒருவர் விருதுநகரில் இருப்பதாக சொன்னார்..

"கவர்ச்சி" பூஜா.. சொக்கி போன மகேஷ்.. ஒரே நாளில் "எல்லாமே" முடிந்தது.. கடைசியில் ட்விஸ்ட்டை பாருங்க

 என்னாச்சு?

என்னாச்சு?

இதைக் கேட்டு ஆர்வமான தமிழ்வாணன், அந்த பெண்ணை உடனே பார்க்க முடிவு செய்தார்.. விருதுநகர் முருகர் கோயிலில் அந்த பெண்ணை வரவழைத்து பார்த்தனர்.. புரோக்கர்கள் 2 பேர் மணப்பெண் பூஜாவை தமிழ்வாணனுக்கு அறிமுகப்படுத்தினர்.. பெண்ணை தமிழ்வாணனுக்கு பிடித்துவிட்டது.. பூஜாவுக்கும் தமிழ்வாணனை பிடித்துவிட்டது.. இதனால் அன்றைய தினமே கல்யாணத்தையும் முடித்துவிடலாம் என்று திடீரென பூஜா வீட்டில் யோசனை சொன்னார்கள்.. அதன்படியே, அதே கோயிலில் திருமணம் நடந்தது.. அதாவது காலையில் பெண் பார்த்து, மாலையில் கல்யாணம் நடந்தது. இரு வீட்டு பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

 தி.நகர்

தி.நகர்

மறுநாள், 15-ம் தேதி காலை உறவினர்களுக்கு பூஜாவை திருமணம் செய்து கொண்டதாக தமிழ்வாணன் அறிமுகப்படுத்தியுள்ளார்.. 16ம் தேதி, தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்று ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான துணியை எடுத்து பூஜாவுக்கு தந்துள்ளார்.. 17-ம்தேதி, மளிகை பொருட்களை வாங்க, பள்ளிகரணையில் உள்ள பிரபல கடைக்கு சென்றுள்ளனர்... தேவையானவற்றை வாங்கி கொண்டு வீடு திரும்புவதற்காக வரும்போது, நகரும் படிகட்டில் (எஸ்கலேட்டர்) தமிழ்வாணன் ஏறியுள்ளார்...

 எஸ்கலேட்டர்

எஸ்கலேட்டர்

ஆனால், எஸ்கலேட்டரில் ஏறுவது தனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லி, பூஜா படிக்கெட்டு வழியாக கீழே இறங்கி வருவதாக கூறி சென்றுள்ளார்.. அதற்கு பிறகு பூஜாவை காணவில்லை.. போன் செய்தால், "நான் என் வீட்டிற்கு வந்துவிட்டேன்" என்று சொல்லி உள்ளார்.. இதைக் கேட்டதும், அதிர்ந்துபோன மகேஷ், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 10 ஆயிரம் ரூபாய் பணமும், பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.. இதையடுத்து, போலீசில் பூஜா மற்றும் 2 புரோக்கர்கள் குறித்து புகார் தந்துள்ளார்.

 முதலிரவு விவகாரம்

முதலிரவு விவகாரம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தமிழ்வாணன் சொல்லும்போது, "திருமணத்திற்கு 1.5 லட்சம் தர வேண்டும் பேரம் பேசிய நிலையில், கையில் இருந்த 1.35 லட்சம் அப்பொழுதே கொடுத்துவிட்டேன்.. மீதமுள்ள 15 ஆயிரத்தை கொடுக்கவில்லை என்றால் முதலிரவு நடக்க விடமாட்டோம் என்று புரோக்கர்கள் என்னை மிரட்டினார்கள்.. முதலிரவு அன்று ரூமுக்குள் சென்றேன்.. அப்போது வந்த பூஜா, மதுபாட்டில் வேண்டும் என்று கேட்டார்.. அதற்கு அவர் இதெல்லாம் தப்பு.. கல்யாணத்துக்கு முன்பு நீ எப்படி இருந்தாயோ எனக்கு தெரியாது.. ஆனால், இனிமேல் இதுபோன்ற கெட்ட பழக்கத்தை விட்டு விடு என்று சொன்னேன்..

 முதலிரவில் வீடியோ

முதலிரவில் வீடியோ

உடனே பூஜா, தன்னுடைய வாட்ஸ்அப்பில் ஏற்கனவே சேமித்துவைத்திருந்த சில வீடியோக்களை எனக்கு காட்டி சொல்லும்போது, "நானும் என் அக்காவும் எப்படி தண்ணி அடிக்கிறோம் பாருங்க.. எனக்கு அந்த சரக்குதான் தான் வேண்டும்" என்று கேட்டார்.. ஆனால், மதுபாட்டிலை வாங்கி தர நான் மறுத்துவிட்டேன்.. இந்த கோபத்தில், முதலிரவுக்கு பூஜா சம்மதிக்கவில்லை.. அதை பற்றி நான் கேட்டதற்கு, மாதவிடாய் என்று காரணம், சொன்னார்.. மேலும், நாங்கள் கொடுமைப்படுத்துவதாக அவர் சொந்தக்காரரிடம் போனில் புகார் சொன்னார்.. நாங்க எப்படி ஒரே நாளில் கொடுமைப்படுத்துவோம்?

முதலிரவு

முதலிரவு

கல்யாணம் ஆன அன்றே அவளுக்காக அவ்வளவு செலவு செய்தோம்.. அடுத்த 2 நாட்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு புத்தாடை எடுத்து தரும் நான், சாப்பாடு கொடுத்திருக்க மாட்டேனா? என் மேலே இப்படி அபாண்டமாக பொய் சொல்லிவிட்டாள்.. திருமணம் என்ற பெயரில் பணம் மோசடி செய்யும் இதுபோன்ற கும்பலை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. எனக்கு நேர்ந்ததுபோல் வேறு யாருக்கும் இதுபோன்ற நடக்ககூடாது" என்று வேதனையுடன் சொன்னார் தமிழ்வாணன்..

பள்ளிக்கரணை

பள்ளிக்கரணை

இப்போது சிக்கல் என்னவென்றால், முதன்முதலில் பள்ளிகாரணை போலீசில் புகார் தர போயுள்ளனர்.. அதற்கு அவர்கள், விருதுநகர் இங்கிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.. நாங்கள் 50 கிலோ மீட்டர் தூரம் வரைதான் கண்டுபிடிப்போம் என்று சொல்லி அந்த புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. பிறகு, இதுகுறித்து விருதுநகரில் உள்ள சூளக்கரை போலீசில், பூஜா மீதும், அந்த 2 புரோக்கர்கள் மீதும் தமிழ்வாணன் புகார் அளித்திருக்கிறார்.. அந்த புகாரை பெற்றதற்கான CSR மட்டுமே சூளக்கரை போலீசார் வழங்கியுள்ளனராம்.. இதுகுறித்து நியாயம் வேண்டும் என்று கதறி கொண்டிருக்கிறார் புதுமாப்பிள்ளை தமிழ்வாணன்!

English summary
How did virudhunagar girl approach young man and pallikkanaranai case issue is going on it முதலிரவுக்கு சம்மதம் சொல்லாமலேயே பண மோசடி செய்த புதுமண பெண்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X