ப்பா.. பும்ரா கேப்டன்சியில் "இதை" நோட் பண்ணீங்களா? அவ்வளவு பிரஷரிலும்.. "பழைய" அவமானங்களுக்கு பதிலடி
சென்னை; இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியிலேயே பும்ரா கலக்கி உள்ளார். பேட்டிங்.. பவுலிங் இரண்டிலும் சிறப்பாக ஆடியவர்.. இன்னொரு பக்கம் கேப்டன்சியிலும் கவனிக்க வைத்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே நடந்த 4 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதன்பின் கொரோனா காரணமாக 5வது டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஐபிஎல்லுக்கு பின்பாக மீண்டும் 5வது டெஸ்ட் போட்டி எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து இந்தியா
கடந்த சீசனுக்கு பின் கோலி கேப்டன்சியில் இருந்து விலகிய நிலையில், ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் சேனா சீரிஸ் என்றாலே ரோஹித்துக்கு குளிர் ஜுரம் வந்துவிடும். அதேபோல் இந்த முறையும் அவரை கொரோனா தாக்கியது. இதனால் கேப்டனாக போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அஸ்வின் இருந்திருந்தால் அவரை கேப்டனாக்கி இருக்கலாம். ஆனால் அவருக்கும் கொரோனா.

பும்ரா கேப்டன்
இதன் காரணமாக ஜடேஜா, புஜாரா, பும்ரா ஆகியோர் கேப்டன்சி லிஸ்டில் வந்தனர். ஆனால் கடைசியில் எதிர்பார்க்கப்பட்ட படியே பும்ரா கேப்டன் ஆனார். கேப்டனாக.. அதுவும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இவர் சிறப்பாக செயல்படுவாரா? தொடரை வென்று கொடுப்பாரா? இங்கிலாந்து வேறு புதிய பலத்தோடு, அசுர பார்மில் இருக்கிறதே, அணியை வெற்றிபெற வைப்பாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் கேப்டன் ஆன பின் வெறும் மாணிக்கமாக இருந்த பும்ரா பாட்ஷாவாக மாறி மிக சிறப்பாக அணியை வழி நடத்த தொடங்கி உள்ளார்.

கேப்டன்சி
பேட்டிங்.. பவுலிங்.. கேப்டன்சி என்று மூன்றிலும் பும்ரா கடந்த 2 நாட்களில் கலக்கி உள்ளார். இந்திய அணியில் கோலி, புஜாரா இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சொதப்பிய நிலையில், பண்ட், ஜடேஜா அணியை மீட்டு எடுத்தனர். 111 பந்துகளில் 131.53 ஸ்டிரைக் ரேட்டில் 146 ரன்களை பண்ட் எடுத்தார். அதேபோல் ஜடேஜா 104 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த பும்ரா வெறும் 16 பந்தில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 31 ரன்கள் எடுத்து அசத்தினார்.

கோலி பேட்டிங்
இதில் போர்ட் போட்ட ஓவரில் மட்டும் 35 ரன்கள் சென்றது. மொத்தமாக இந்திய அணி 416 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் பின் இறங்கிய இங்கிலாந்து அணி வறண்ட பிட்சை பயன்படுத்தி அதிக ரன்களை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதில் பாஸ்ட் பவுலிங் எடுபடாது என்பதால் பும்ரா கண்டிப்பாக ஸ்பின் பவுலர்களை பயன்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்ட்டது.. ஆனால் பும்ராவின் நல்ல நேரம் லேசாக மழை பெய்தும், மைதானமும், பிட்சும் ஈரமானது.

பும்ரா வியூகம்
இதனால் மீண்டும் இங்கிலாந்து பேட்டிங் வந்ததும், பும்ரா பாஸ்ட் பவுலர்களை மட்டுமே பயன்படுத்தினார். அவரின் கேப்டன்சியில் நேற்று கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அது பீல்டிங் செட்டப் மற்றும் ஓவர் ரொட்டேஷன்தான். பொதுவாக கோலி ஸ்பின் பவுலர்களை அதிகம் பயன்படுத்த மாட்டார். சில போட்டிகளில் முதல் 40 ஓவர் கூட அஸ்வினுக்கு ஓவர் கொடுக்காமல் கோலி அமர வைப்பார். அதேபோல்தான் பும்ராவும் நேற்று செய்தார்.

பும்ரா ஸ்டைல்
வெறும் 2 பாஸ்ட் பவுலர்களை மாற்றி மாற்றி போட வைத்தார். ஒருவர் பும்ரா.. இன்னொருவர் ஷமி. இரண்டு பேரும் மாற்றி மாற்றி ஓவர் போட இடை இடையே மூன்றாவது பவுலர் சிராஜை பயன்படுத்தினார். இது கோலி ஸ்டைல் கேப்டன்சி. ஆஸ்திரேலியாவில் முன்பு ஸ்மித்தும் (உப்புத்தாள் விவாகரத்திற்கு முன்) இதேபோல் கேப்டன்சி செய்துள்ளார். இதுவரை இந்திய அணி 27 ஓவர்களை வீசி உள்ள நிலையில் 3 ஓவர்களை சிராஜ் வீசி உள்ளார். மீதம் உள்ள ஓவர்களை ஷமி, பும்ரா மட்டுமே வீசி உள்ளனர்.

5 விக்கெட்
இது அணிக்கு கைமேல் பலனமாக 5 விக்கெட்டுகளை கொடுத்தது. பும்ரா பவுலர்களின் கேப்டன் என்பதை நிரூபித்து உள்ளார். நேற்று இவரின் பீல்டிங் செட்டப்பும் சிறப்பாக இருந்தது. ஷமி பவுலிங் செய்த போது இவர் பீல்டர்களை நிறுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. பவுலர் என்பதால்.. பவுலர்களின் சைக்காலஜி உணர்ந்து சிறப்பாக பீல்டிங் செட் செய்தார். இந்திய அணிக்கு எதிர்கால நிரந்தர கேப்டனாகும் தகுதி தன்னிடம் உள்ளதை பும்ரா நிரூபித்துள்ளார்.

பும்ரா பதில்
முன்பு ஆஸ்திரேலிய தொடரில் கோலி கேப்டன்சியில் இருந்து தற்காலிகமாக விலகிய போதே பேட்டி ஒன்றில் இந்திய டெஸ்ட் கேப்டன்சியை கொடுத்தால் ஏற்பேன் என்று பும்ரா கூறி இருந்தார். இப்போது அதை நிரூபித்தும் உள்ளார். கடந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் கோலி தனக்கு குழந்தை பிறந்ததால் நாட்டிற்கு திரும்பினார். அப்போது ரஹானே கேப்டனாக இருந்தாலும்.. ரஹானே - பும்ரா - அஸ்வின் ஆகியோரின் ஆலோசனைதான் இந்திய அணியை வழி நடத்த காரணமாக இருந்தது.

பும்ரா சிறப்பான பதிலடி
அப்போது பேட்டி ஒன்றில்.. செய்தியாளர்.. இது கோலி உருவாக்கிய டீம்.. விக்கெட்டுகளை பாஸ்ட் பவுலர்கள் எடுக்க கோலி அணியை உருவாக்கிய விதம்தான் காரணம் என்றார். அதற்கு பும்ரா கிண்டலாக.. நான் பட்ட கஷ்டங்கள், விடா பயிற்சிகள்தான் நான் விக்கெட் எடுக்க காரணம் என்று நாசுக்காக கூறினார். அப்போது தான் அவமானப்படுத்தபட்டது பும்ரா உணர்ந்திருப்பார். இந்த நிலையில் தற்போது தனது பேட்டிங்.. பவுலிங்.. கேபடன்சி மூலம் அனைத்து கேள்விகளுக்கும் பும்ரா பதிலடி கொடுத்துள்ளார்.