காரணமே "அவர்"தான்.. சிக்கி திணற போகுது பாஜக.. டெல்லியின் கறார் முடிவு.. வெடித்த லோக்கல் பாலிட்டிக்ஸ்
சென்னை: தமிழக காங்கிரஸில் சும்மாவே புயல் அடிக்கும்.. இப்போது, ராஜ்ய சபா வேட்பாளர் அறிவிப்பையடுத்து, மேலும் பூசல்களும், பொருமல்களும் வெடித்து கிளம்பி உள்ளன.
திமுக ஒதுக்கிய ஒரே ஒரு ராஜ்ய சபா சீட்டை யாருக்கு தருவது என்ற சிக்கல் கடந்த சில நாட்களாகவே இழுபறியில் இருந்தது.
நவீன ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு.. தருமபுரியில் பரபரப்பு! 7 பேர் கைது
2016ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் பதவி காலம் முடிவடைய உள்ளதால், மீண்டும் தமிழகத்தில் இருந்து அவர் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி கொண்டே இருந்தது.

அழகிரி
அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவரான கே.எஸ்.அழகிரியின் பதவிகாலம் முடிவடைந்திருப்பதாலும், புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாலும், இதனால், மாநிலங்களவை எம்.பி. சீட், கே.எஸ்.அழகிரிக்கு ஒதுக்கப்படலாம் என்றும் சலசலக்கப்பட்டது. இதற்காக ப.சிதம்பரமும், கேஎஸ் அழகிரியும் கடுமையாக முயற்சித்தார்கள்.. இருவருமே தங்களால் முடிந்த அளவுக்கு மேலிட காங்கிரசுக்கு அழுத்தத்தை தந்தார்கள்.

கார்த்தி சிதம்பரம்
அழகிரி இங்கிருந்து டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து, தனக்குதான் சீட் வேண்டும் என்று கேட்டார்.. அதேபோல, ப.சிதம்பரம் அங்கிருந்து இங்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டும் போனார்.. இருந்தாலும், ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருக்கும் சூழலில், கார்த்தி சிதம்பரம் மக்களவை உறுப்பினராக இருப்பதாலும், ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு சிக்கல் எழுந்தது.

ராஜ்ய சபாசீட்
ஆனால், காங்கிரசுக்காக திமுக ஒதுக்கீடு செய்த 1 ராஜ்யசபா இடத்துக்கு ப.சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை... பொதுவாக தேர்தல் வந்தாலே, தங்கள் கட்சியின் வேட்பாளர்களை வேட்பு மனுத் தாக்கலுக்கு முதல்நாள் தான் அக்கட்சி தலைமை அறிவிக்கும். அதுவரை இழு இழு என இழுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில், இந்த முறையும் காங்கிரசின் வேட்பாளர்களை வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள் அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை.

ப.சிதம்பரம்
திமுக ஒதுக்கிய இந்த 1 இடத்தை கைப்பற்ற காங்கிரசில் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி உள்பட பலரும் முட்டி மோதினர். இளைஞர் ஒருவருக்கு அல்லது நீண்ட கால உழைப்பாளியாக இருக்கும் புதிய முகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சோனியாவிடம் வலியுறுத்தியிருந்த ராகுல்காந்தி, ப.சிதம்பரத்துக்கு மீண்டும் வாய்ப்பு தருவது சர்ச்சையை உருவாக்குவதுடன் கட்சியினரிடம் சலிப்பையும் ஏற்படுத்தும் என தனது கருத்தாக தெரிவித்திருக்கிறார்.

மன்மோகன்
இந்த சூழலில், தமிழகத்திலிருந்து யாரை தேர்வு செய்வது என்கிற ஆலோசனையில், ராகுல் மீண்டும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தின் தற்போதைய சூழலில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான காங்கிரசின் குரல் பார்லிமெண்டில் வலிமையாக ஒலிக்க வேண்டுமாயின் ப.சிதம்பரம் ராஜ்யசபாவுக்குள் செல்ல வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சோனியாவிடம் தெரிவித்திருக்கிறார். மன்மோகனின் யோசனையை ஏற்று ராகுலின் கருத்து புறக்கணித்து சிதம்பரத்தையே வேட்பாளராக தேர்வு செய்தார் சோனியா என்கிறது டெல்லி தகவல்.

வரவேற்பு
இந்த நிலையில், அண்மையில் காங்கிரஸ் நடத்திய சிந்தனையாளர்கள் கூட்டத்தில், கட்சி பதவிகள் பரவலாக்கப்பட வேண்டும், அப்படி பரவலாக்குவதன் மூலமே கட்சி வலிமையடையும் என்கிற கண்ணோட்டத்தில் ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கோட்பாடு எதிரொலித்தது. இதற்கு பலத்த வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், ப.சி.க்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டதை அடுத்து தமிழக காங்கிரசுக்குள் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம்.

அவமானம்
உடனே கட்சி தலைமைக்கு, ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கோட்பாட்டை தலைமையே மீறலாமா? தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்காகவும், கட்சி தொண்டர்களுக்காகவும் ப.சிதம்பரம் என்ன செய்து விட்டார் ? என்ன செய்திருக்கிறார் ? எதுவுமே இல்லை. அப்படிப்பட்டவருக்கே மீண்டும் மீண்டும் பதவி வழங்கி தொண்டர்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்று ஏகப்பட்ட புகார்களை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.