• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்னாச்சு மநீமவுக்கு?.. அடுத்தடுத்து விலகிய நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கப் போகிறார் கமல்?

|

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து கூண்டோடு நிர்வாகிகள் ராஜினாமா செய்வதும் விலகி வருவதும் அதன் தலைவர் கமல்ஹாசனுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதை எப்படி அவர் சமாளிக்கப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

  Kamal Hassan காட்டம்! தோல்வியின்போது ஓடும் கோழைகளைப் பற்றி பொருட்படுத்தியதில்லை.

  சீரமைப்போம் தமிழகத்தை, நாளை நமதே என்ற ஆக்கப்பூர்வமான கோஷங்களுடன் அரசியலுக்கு வந்தவர் கமல்ஹாசன். கட்சி தொடங்கி போட்டியிட்ட ஓராண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் 3.77 சதவீதம் வாக்குகளை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

  இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம் விழுந்ததாக அறிவிப்பு இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம் விழுந்ததாக அறிவிப்பு

  அது போல் சட்டசபைத் தேர்தலில் கமல் கட்சி பல தொகுதிகளில் 3 ஆவது, 4 ஆவது இடங்களை பிடித்தது. மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கமல்ஹாசனும் தோல்வி அடைந்தார். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  கமல்ஹாசன்

  கமல்ஹாசன்

  கடைசி நேரம் வரை கமல்ஹாசன் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் திடீரென வானதி ஸ்ரீனிவாசன் ஆயிரத்து சொட்சம் வாக்குகளை பெற்று வென்றார். இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் தோல்வி குறித்து ஆலோசனை நடத்திய கமல்ஹாசன் கட்சி விரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் முடிவுகள் கடுமையானதாக இருக்கும் என எச்சரித்தார்.

  மகேந்திரன் விலகல்

  மகேந்திரன் விலகல்

  இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ஆர் மகேந்திரன் கட்சியிலிருந்து விலகினார். தனது கடிதத்தை கட்சி மேலிடத்திடத்தில் சமர்ப்பித்தார். இதுகுறித்து மகேந்திரன் தனது அறிக்கையில் கட்சியில் ஜனநாயகம் இல்லை, வெளிப்படைத்தன்மை இல்லை, கமலை சுற்றியுள்ள நபர்கள் அவரை தவறாக வழிநடத்துகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

  ராஜினாமா

  ராஜினாமா

  இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு. சி.கே.குமரவேல், மவுரியா, பொதுச்செயலாளர் முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளனர். இது போல் கோவை மாவட்ட நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் கமல்ஹாசனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

  கமல்ஹாசனுக்கு நெருக்கடி

  கமல்ஹாசனுக்கு நெருக்கடி

  மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகுவதால் கமல்ஹாசன் இந்த நெருக்கடியை எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி எழுகிறது. கமல்ஹாசனை சுற்றியுள்ளவர்கள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் என வசதி படைத்தவர்களே இருந்தனர். இதனால் நேர்மைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.

  எப்படி சமாளிப்பார்

  எப்படி சமாளிப்பார்

  தற்போது இப்படி மூத்த நிர்வாகிகள் எல்லாம் விலகிவிட்டதால் கட்சியை கமல்ஹாசன் எப்படி கொண்டு செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல்ஹாசன் தனது வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சமாளித்துவிட்டார். இதைத்தான் சமாளிக்க முடியாமல் திணறிவிடுவாரா என மற்ற நிர்வாகிகள் நம்பிக்கையோடு அவருடன் பயணிக்கிறார்கள்.

  English summary
  How Kamal Haasan will tackle the issue of his party activist resignation?
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X