சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிலை கடத்தல்.. எத்தனை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தீர்கள்? பொன் மாணிக்கவேலுக்கு ஹைகோர்ட் கேள்வி!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, பொன் மாணிக்கவேல் தரப்புக்கு ச

Google Oneindia Tamil News

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, பொன் மாணிக்கவேல் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

How many charge sheet filed so far MHC asks Pon Manickavel

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், சிலைக்கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அறிக்கைகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவராக உள்ள கூடுதல் டிஜிபியிடம் அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பொன் மாணிக்கவேல் பின்பற்றவில்லை எனவும் தமிழக அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

எழும்பூர் கண் மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்.. மரம் வெட்ட தடை கோரி ஹைகோர்ட்டில் மனு எழும்பூர் கண் மருத்துவமனையில் கூடுதல் கட்டடம்.. மரம் வெட்ட தடை கோரி ஹைகோர்ட்டில் மனு

பொன்மாணிக்கவேல் தனது விசாரணை தொடர்பான எந்த விவரங்களையும் கூடுதல் டிஜிபி-யிடம் தாக்கல் செய்யவில்லை. அவர் அரசுடன் ஒத்துழைக்க மறுப்பதாகவும் அரசுத்தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் காவல்துறை டி.ஜி.பி நடத்தும் கூட்டங்கள் எதிலும் பொன் மாணிக்கவேல் கலந்து கொள்வதில்லை. குழுவில் உள்ள மற்ற அதிகாரிகளையும் கூட்டங்களில் பங்கேற்கவிடாமல் தடுப்பதாகவும் அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றி பொன் மாணிக்கவேலுக்கு உரிய ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை. பொன் மாணிக்கவேல் கூறும் குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து அரசிடம் கேள்வியெழுப்பும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விவரங்களை
தாக்கல் செய்யாத பொன்மாணிக்கவேலிடம் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.

பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு கடந்த இரண்டாண்டுகளில் 31 கோடியே 96 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள போதிலும், பொன் மாணிக்கவேல் இதுவரை ஒரு வழக்கில் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து நீதிபதிகள், சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பிறகு எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற விபரத்தை அடிப்படையாக வைத்தே இந்த வழக்கை முடிவு செய்ய முடியும் என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த பொன் மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் செல்வராஜ், கடந்த 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், 6 மாதத்திற்கு பிறகே உச்ச நீதிமன்றத்தால் உத்தரவு உறுதி செய்யப்பட்டதாகவும், பணி செய்யவிடாமல் அரசு தடுத்த நேரத்தில் சில விளக்கம் கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பொன் மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் குறித்து தமிழக அரசும், இதுவரை விசாரித்த வழக்கு விபரங்கள் குறித்து பொன் மாணிக்கவேல் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 25 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

English summary
How many charge sheet filed so far MHC asks Special Officer Pon Manickavel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X