சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறையில் உள்ள கைதிகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா வந்துள்ளது.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கடலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ளார் இவரின் தாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரைப் பார்க்க ஆறு வாரம் பரோல் கேட்டு சரவணனின் மனைவி சங்கீதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இது குறித்து பதிலளிக்க சிறைத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

how many coronavirus cases have been confirmed in prison : HC Ask TN govt

மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் விஜய். தற்போது சிறைகளில் அதிகளவிலான கொரோனா தொற்று பரவி வருவதாக தெரிவித்தார். மேலும் சரவணன் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்

இதனையடுத்து சிறைச்சாலையில் கைதிகளுக்கு எவ்வளவு பேருக்கு. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது? இதுவரை எவ்வளவு பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English summary
Madras High Court has ordered the Tamil Nadu government to submit a report on how many coronavirus cases have been confirmed in prison
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X