சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளை கொடுக்கப்போகிறார்கள்?... டிடிவி தினகரன் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு எழுதிய மாணவி ஊர் திரும்பும் வழியில் உயிரிழப்பு- வீடியோ

    சென்னை: நீட்தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்சபையில் 2 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது? என்று டி.டி.வி.தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

    நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. கடந்த ஆண்டைக்காட்டிலும் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 15 மதிப்பெண் அதிகரித்துள்ளது.

    How many more sacrifices will be given for the Regime Power chair? TTV Dinakaran question

    அதே நேரம், முன்னேறிய பிரிவினருக்கு கடந்த ஆண்டு 119 ஆக இருந்த கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு 134 ஆக அதிகரித்துள்ளது. ஓ.பி.சி பிரிவினருக்கு 96 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 107 ஆக அதிகரித்துள்ளது. நீட் தேர்வு எளிதாக இருந்த‌தால் மாணவர்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நீட் தேர்வு முடிவுகளில், தமிழகத்தில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 9.01% மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து ஸ்ருதி சாதனை படைத்துள்ளார்.

    இதற்கிடையே, நீட்தேர்வில் தோல்வி அடைந்த பட்டுக்கோட்டை மாணவி வைஸ்யா, திருப்பூர் மணவி ரிதுஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    நீட் தேர்வு தோல்வியால் தமிழக மாணவிகள் மரணம்.. மத்திய-மாநில அரசுகளின் பச்சை படுகொலை.. சீறும் சீமான் நீட் தேர்வு தோல்வியால் தமிழக மாணவிகள் மரணம்.. மத்திய-மாநில அரசுகளின் பச்சை படுகொலை.. சீறும் சீமான்

    இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தமிழக மாணவச் செல்வங்களின் மருத்துவ கனவில் மண் அள்ளி போடும் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா ஆகியோர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக்கொண்டிருப்பது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வேதனையில் மனம் விம்முகிறது.

    இன்னும் எத்தனை உயிர்களை இந்த நீட் காவு வாங்கப் போகிறது? இன்னும் எத்தனை பேரின் கனவுகளைக் கருக்கிடப் போகிறது? நீட்தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் 2 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட மசோதாவின் கதி என்ன ஆனது? பதவி நாற்காலிக்காக இன்னும் எத்தனை பலிகளை கொடுக்கப்போகிறார்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    English summary
    TTV Dinakaran question that How many more sacrifices will be given for the Regime Power chair?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X