சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்திற்கும் ஸ்பெஷல் விமானம்.. எந்தெந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேரை அழைத்து வருகிறார்கள்? லிஸ்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க கூடிய, இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கையை விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் மூலமாக அழைத்து வரும் பணிகளை இந்திய அரசு துவங்கியுள்ளது.

Recommended Video

    இந்தியர்களை மீட்க விரைந்த போர்க்கப்பல்கள்... என்ன சிறப்பு?

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பீதியில் இருக்கக்கூடிய இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து நிலையில், அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இந்த நாடுகளிலிருந்து இந்தியாவின் எந்த ஊருக்கு இவ்வாறு விமானம் மூலமாக அழைத்து வரப்படுவார்கள் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 64 விமானங்கள் மூலமாக 12 நாடுகளிலிருந்து சுமார் 14 ஆயிரத்து 800 பேரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    சென்னையில் மட்டும் 2008 பேர் பாதிப்பு.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு லிஸ்ட்சென்னையில் மட்டும் 2008 பேர் பாதிப்பு.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு லிஸ்ட்

    ஐக்கிய அரபு அமீரகம், சவுதி

    ஐக்கிய அரபு அமீரகம், சவுதி

    ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபி, துபாய், சார்ஜா ஆகியவற்றிலிருந்து கொச்சி, கோழிக்கோடு, சென்னை, லக்னோ, ஹைதராபாத், டெல்லி, அமிர்தசரஸ் ஆகிய நகரங்களுக்கு 2000 பேரை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத், தம்மம் ஆகிய நகரங்களில் இருந்து, கோழிக்கோடு, டெல்லி, கொச்சி ஆகிய நகரங்களுக்கு 1000 பயணிகள் அழைத்து வரப்படுவார்கள்.

    கத்தார், பக்ரைன், ஓமன்

    கத்தார், பக்ரைன், ஓமன்

    கத்தார் நாட்டின், தோஹா நகரில் இருந்து கொச்சி மற்றும் திருவனந்தபுரத்துக்கு 400 பேர் அழைத்து வரப்படுவார்கள். பக்ரைன் நாட்டின் மனாமா நகரில் இருந்து கொச்சி மற்றும் கோழிக்கோடு நகரங்களுக்கு 400 பேர் அழைத்து வரப்படுவார்கள். ஓமன் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து, கொச்சி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் 450 பயணிகள் அழைத்து வரப்படுவார்கள்.

    கிழக்கு நாடுகள்

    கிழக்கு நாடுகள்

    வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் இருந்து, ஸ்ரீநகர், டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களுக்கு 1, 400 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் இருந்து, அகமதாபாத், மும்பை, டெல்லி, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களுக்கு 1250 பேர் அழைத்து வரப்படுவார்கள்.

    சிங்கப்பூர், மலேசியா

    சிங்கப்பூர், மலேசியா

    சிங்கப்பூர் நாட்டில் இருந்து, திருச்சி, மும்பை, அகமதாபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு 1,250 பேர் அழைத்து வரப்படுவார்கள் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து, டெல்லி, மும்பை, கொச்சி, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு 1,750 பேரை அழைத்து வருகிறது.

    அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானம்

    அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு விமானம்

    பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரிலிருந்து, சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு 1,750 பேர் அழைத்து வரப்படுவார்கள். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க், சிகாகோ, வாஷிங்டன் நகரங்களில் இருந்து, சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு 2100 பேர் அழைத்து வரப்படுவார்கள்.

    English summary
    How many NRI people from other countries including UAE, United States will be bring back to India? here is the full passengers details and city wise data.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X