சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓஹோ.. இதுதான் கணக்கு போல.. அதாவது அவங்களுக்கு ஆளுக்கு 30, 20, 25.. மிச்ச 160ம் இவங்களுக்காம்!

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு சீட்கள் எவ்வளவு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: எப்படி உதயசூரியன் சின்னத்தில்தான், மெஜாரிட்டி போட்டியிட வேண்டும் என்று திமுக ஆசைப்படுகிறதோ அதுபோலவே அதிமுகவும் ஒரு கணக்கு போட்டுக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு அதிமுகவில் உள்ள கூட்டணியே அநேகமாக வரும் தேர்தலிலும் தொடரும் போல தெரிகிறது.. பாமகவுக்கு சில மனக்கசப்பு உள்ளது.

பாஜகவுக்கு பல மனக்கசப்பு உள்ளது.. தேமுதிக என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை.. இந்த நிலையில், கூட்டணி தொகுதிகளுக்கு எவ்வளவு சீட் தருவது என்ற ஒரு கணக்கு அதிமுகவுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

பாமக

பாமக

கூட்டணியிலேயே மிக முக்கியமான கட்சி பாமகதான்.. வடமாவட்டங்களில் இன்னும் வலுவாக வாக்குகளை தக்க வைத்து கொண்டிருக்கும் நிலையில், 2 மிக முக்கியமான விஷயத்தை பாமக கிளப்பி உள்ளது.. ஒன்று அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி என்பதையும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் பெற்ற பயன் எவ்வளவு என்று அறிவிக்க வேண்டும் என்ற அறிவிப்பையும் பாமக முன்னெடுத்தது.

 டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

இதில் அன்புமணிக்கு பதவி கேட்பது என்பது வெளிப்படையாகவும், உறுதியாகவும் தெரியவில்லை.. ஆனால், இடஒதுக்கீடு சம்பந்தமாக போராட்டமே நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். இருந்தாலும் தேர்தல் நேரத்தில் போராட்டம் அறிவிப்பு என்றால், ராமதாஸ் கணக்கு வேறு மாதிரியாகவே இருக்கும் என்றும், ஒருவேளை சீட் பேரத்துக்கான வழிவகையாகவும் இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் எப்படி பார்த்தாலும் 25 முதல் 30 சீட் வரைதான் பாமகவுக்கு ஒதுக்க அதிமுகவில் முடிவாகி உள்ளதாம்.

 பாஜக

பாஜக

அதேபோலதான் பாஜகவும்.. முருகன் 60 சீட் என்று சொல்லி கொண்டிருந்தாலும், இதுவரை ஒரு சத்தமும் அதிமுக தரப்பில் இருந்து அதற்கு வரவே இல்லை.. பாஜக தனித்து களம் காணும் என்ற யூகங்கள் வலம் வரும் நிலையில், வேல்யாத்திரை உட்பட பல்வேறு மோதல் விவகாரங்கள் அதிமுகவுடன் பாஜகவுக்கு ஏற்பட்டு வரும் நிலையில், அக்கட்சிக்கு 25 சீட்டுக்கு மேல் தருவது சந்தேகம் என்கிறார்கள்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

தேமுதிகவில், நாங்கள் சிங்கம், சிங்கிளாக வருவோம் என்று ஒருநாள் பிரேமலதா சொன்னாலும், அதற்கு பிறகு அந்த பேச்சையே காணோம்.. இந்த முறை விஜயகாந்த் மகனை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அந்த கட்சியில் யார் நின்றாலும், 20 சீட்டுகள் மட்டுமே ஒதுக்க யோசித்து வருகிறார்களாம். ஆக, பாமக 30, தேமுதிக 20, பாஜக 25 என்று 75 சீட்டுகளை கூட்டணிக்கு தந்தாலும், மிச்சம் இருக்கும் இடங்களில் அதிமுகவே களமிறங்க தீவிரமாக யோசித்து வருகிறதாம்..!

English summary
How many seats will be allotted to the coalition parties in the AIADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X