சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதெல்லாம் உண்மையா.. திமுகவுக்கு வந்த "திடீர்" துணிச்சல்.. முடிவெடுக்க போகுதாம்.. அப்ப அந்த கட்சிகள்?

திமுக 190 சீட்களில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: பரவி வரும் தகவல் உண்மையா? பொய்யா? வதந்தியா? எதுவுமே புரியவில்லை.. ஆனால், திமுக ஏதோ ஒரு துணிச்சல் முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அப்படி ஒரு இழுபறி திமுக கூட்டணியில் நடந்து வருகிறது.. மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தநிலையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.. கூடி கூடி பேசுகிறார்கள்., ஆனால் இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

3 மாதமாகவே கூட்டணி கட்சிகள் அதிருப்தி கலந்த குழப்பத்தில் உள்ளது.. விசிக, மதிமுக, காங்கிரஸ் கட்சிகள் இந்த நிமிஷம் வரை திமுக கூட்டணியில்தான் இருக்கின்றன என்றாலும், இந்த கட்சிகள் எந்நேரமும் கூட்டணியில் இருந்து விலகி 3வது அணியாக உருவெடுக்குமோ அல்லது 3வது அணி வந்தால், அதனுடன் இணைந்து தேர்தலை சந்திக்குமோ என்ற ஐயமும் இருந்து கொண்டே இருக்கிறது.

 தகவல்

தகவல்

இந்நிலையில் 2 விஷயங்கள் பரவி வருகின்றன.. திமுகவை பொறுத்தவரை சாதாரணமாக வெற்றி பெறுவதை காட்டிலும் மெஜாரிட்டி வைத்து ஜெயிக்கவே விரும்புகிறது.. காரணம், அடுத்து வரும் எம்பி தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்க வேண்டும் என்பதாலும், அதைவைத்து ஸ்டாலின் தேசிய அரசியலில் கால்பதிக்க உதவும் என்பதாலும்தான்.

 போட்டி

போட்டி

அதற்கான அடித்தளத்தை இப்போதே, இந்த தேர்தலிலேயே அமைக்க பார்க்கிறது திமுக.. அந்த வகையில், பெரும்பாலான தொகுதிகளில் திமுகவே நேரடியாக போட்டியிடுவது என்று ஆரம்பத்தில் இருந்தே முடிவில் இருக்கிறது.. திமுக போட்டியிடும் சீட் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.. முதலில் 160 இடங்களில் திமுக போட்டியிடும் என்று சொல்லப்பட்டது, அடுத்து 170 ஆனது, அடுத்து 180 இடங்களில் போட்டியிட வாய்ப்பு என்று சொல்லப்பட்டது.. இன்றைய தகவலின்படி, 190 சீட்டுக்களில் போட்டியிட போகிறதாம்.

 190 சீட்

190 சீட்

வழக்கம்போல இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை.. ஆனால், 190 என்பது கிட்டத்தட்ட முடிவாகி விடும் என்கிறார்கள்.. அப்படியானால் மிச்சமுள்ளதை கூட்டணிகளுக்கு தரப்படும் என தெரிகிறது.. ஏற்கனவே அதிருப்தியில் உள்ள கூட்டணி கட்சிகள், இதை கேட்டால் என்ன ஆகுமோ என்று தெரியவில்லை.. உடன்படுவார்களா? இணக்கமாவார்களா? அல்லது 3வது அணியா? என்றும் புரியவில்லை.

வெற்றி

வெற்றி

இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. 190 சீட் என்பதை எல்லாம் கடந்து, தேர்தலில் தனித்து போட்டியிட திமுக தயாராகி வருகிதறாம்.. ஏனென்றால் கூட்டணியே இல்லாமல் தனித்து போட்டியிட்டால் கூட திமுக மிகப்பெரிய வெற்றியை பெற வாய்ப்பிருப்பதாக ஐபேக் டீம் ஸ்டாலினிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது... இப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்டால், கூட்டணி கட்சிகள் எப்படி ரியாக்ட் செய்யுமோ அதுவும் தெரியவில்லை..

 சுமூக முடிவு

சுமூக முடிவு

காங்கிரஸ் கட்சி 2 நாட்களாக விரக்தியின் உச்சக்கட்டத்தில் உள்ளது.. எனினும் கூட்டணி இல்லாமல் திமுக தனித்து போட்டியிட்டது கிடையாது.. அந்த வகையில், இந்த முறை அனைவரையும் அரவணைத்தே தேர்தலை சந்திப்போம் என்று பலமுறை திமுக தலைவர் சொல்லி வரும் நிலையில், எல்லாம் நல்லபடியாகவே முடியும் என்று நம்பப்படுகிறது.. பார்ப்போம்.!

English summary
Will DMK contest in 190 seats in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X