சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேபிள் துடைத்த "பாய்" முதல் ராஜகோபால் ஹோட்டல்களின் ராஜாவான கதை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Saravana Bhavan Rajagopal no more | ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்- வீடியோ

    சென்னை: ஒரு சிறிய ஹோட்டலில் டேபிள் துடைத்து வந்த ராஜகோபால் இன்று வெளிநாடுகள் வரை தனது ஹோட்டல் தொழிலை விஸ்தரிக்கும் அளவுக்கு சிகரத்தை தொட்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் புண்ணையாடி எனும் குக்கிராமத்தில் 1947-ஆம் ஆண்டு ஏழை குடும்பத்தில் பிறந்தார் ராஜகோபால். இவரது கிராமத்துக்கு பேருந்து வசதி கூட இல்லை. வறுமையால் 7-ஆம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலை தேடி சென்னை வந்தார்.

    அப்போது ஒரு ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலையை செய்த அவர் இரவு நேரத்தில் கட்டாந்தரையில் படுத்து உறங்கினார். அப்படியே மெல்ல மெல்ல டீ போட கற்றுக் கொண்டார். பின்னர் அப்படியே சமையல் வேலைகளையும் கற்றார்.

    மண்ணாசை.. பெண்ணாசை.. ஜீவஜோதி மீது பேராசை.. அது மட்டும் இல்லேன்னா.. ராஜகோபால் லெவலே வேற! மண்ணாசை.. பெண்ணாசை.. ஜீவஜோதி மீது பேராசை.. அது மட்டும் இல்லேன்னா.. ராஜகோபால் லெவலே வேற!

    தி நகர்

    தி நகர்

    இந்த நிலையில் ஒரு மளிகை கடையில் பணிபுரிந்த ராஜகோபால் தனது உறவினர்களின் உதவியால் சிறிய மளிகைக் கடையை திறந்தார். கடந்த 1979-ஆம் ஆண்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சாப்பிடுவதற்காக திநகர் செல்கிறேன் என்றார்.

    சரவணபவன்

    சரவணபவன்

    உடனே அண்ணாச்சிக்கு ஒரு ஐடியா உதயமானது. கேகே நகரில் ஹோட்டல் இல்லாததால் பெரும்பாலானோர் தி நகர் சென்று உணவருந்துகின்றனர். எனவே நாம் ஒரு ஹோட்டலை தொடங்குவோம் என எண்ணி 1981-ஆம் ஆண்டு சரவணபவனை தொடங்கினார்.

    ஆலோசனை

    ஆலோசனை

    மற்ற ஹோட்டல்களில் ஏதோ வயிறு நிரம்பினால் போதும் என்ற நிலை இருந்த போது தரமான பொருட்களை கொண்டு சுவையான உணவை அளித்தார். இதனால் ஆரம்பத்திலேயே நஷ்டத்தை சந்தித்தார். ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்போம், தரமற்ற பொருட்கள வாங்குவோம் என ஆலோசனை கூறிய அதிகாரியை வீட்டுக்கு அனுப்பினார்.

    சாம்ராஜ்ஜியம்

    சாம்ராஜ்ஜியம்

    பின்னர் ஒவ்வொரு மாதமும் ரூ 10 ஆயிரம் இழப்பு ஏற்பட்ட வண்ணம் இருந்தது. எனினும் உணவகத்தின் மீது மதிப்புக் கூட கூட இந்த இழப்பீடுகள் அப்படியே லாபமாக மாறின. இப்படித்தான் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை ராஜகோபால் வகுத்தார்.

    English summary
    How Rajagopal started his hotel career and run it successfully.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X