• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஸ்பீட் எடுக்கும் ஸ்டாலின்.. டபுள் பிளான்.. சொந்தக்காரர் மீதே "கை" வைத்த அமைச்சர்.. திகைக்கும் அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் சொந்தக்காரரையே, திமுக பக்கம் தூக்கி வந்துவிட்டார் செந்தில்பாலாஜி.. இதையடுத்து கொங்குவில் திமுகவின் பலம் ஏறுகிறது.. அதிமுகவின் செல்வாக்கு கரைகிறது..!

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக விவசாய பிரிவு செயலாளரும், எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக பொறுப்பாளருமான சி.செல்லதுரை, அப்படியே திமுகவுக்கு ஜம்ப் ஆகிவிட்டார்.!

இது வெறும் கட்சி தலைவர் இல்லை.. இதற்கு பின்னணியில் மிகப்பெரிய அரசியலே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!

 செல்லதுரை

செல்லதுரை

செல்லதுரை என்பவர் அதிமுகவின் பிராண்ட் என்று கொங்குமண்டலத்தில் அறியப்பட்டவர்.. இவர் தன்னுடன் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை மற்றும் அணி நிர்வாகிகள், சேலம் மேற்கு மாவட்ட தமாகா செயலாளர் எம்.விஜயராஜ், கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு கட்சி) சேலம் மாவட்ட அமைப்பாளர்ஜி. ரங்கநாதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை அழைத்து கொண்டு போய் திமுகவில் இணைத்துள்ளார்.

 செந்தில்பாலாஜி

செந்தில்பாலாஜி

சமீபகாலமாக உற்று நோக்கினால், இதுபோன்ற மாற்று தரப்பினர் திமுகவில் இணையும் நிகழ்வுகளில் எல்லாம் செந்தில்பாலாஜி ஆஜராகிவிடுகிறார்.. அதேபோல, திமுகவில் இணைந்து கொண்டிருப்பவர்களும் பெரும்பாலும் கொங்குவை சேர்ந்தவர்கள்.. குறிப்பாக அதிமுகவை சேர்ந்தவர்கள்.. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவை கடந்த காலங்களில் முழுமையாக பெற்றவர்கள்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அந்த வகையில்தான் செல்லதுரைக்கும் ஸ்கெட்ச் போட்டுள்ளார் செந்தில்பாலாஜி.. எடப்பாடி பழனிசாமியின் வெற்றிக்காக 2 மாதத்துக்கு முன்பு உழைத்த செல்லதுரையையே செந்தில்பாலாஜி, திமுகவுக்கு தூக்கி செல்கிறார், அதிருப்தியில் உள்ளவர்களை திமுகவிற்கு அழைத்து செல்வது என்பது அசால்ட் காரியம்.. இதன்மூலம் 2 விஷயங்கள் கசிகிறது.

 முக்கிய புள்ளி

முக்கிய புள்ளி

ஒன்று, கொங்குவை மட்டுமே இப்போதைக்கு திமுக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.. முக்கிய புள்ளிகளை திமுகவில் இணைப்பதன் மூலம் அதிமுகவின் பலத்தை அங்கு குறைப்பதற்கான ஆரம்பமாக இது கணிக்கப்படுகிறது.. அத்துடன் எடப்பாடி பழனிசாமிக்கான திமுகவின் நேரடி செக் என்றும் கருதப்படுகிறது. எடப்பாடிக்கு எல்லாமுமாக முக்கிய கை செல்லதுரை திமுகவில் வந்துள்ளது, அதிமுக தலைமைக்கு மேலும் கலக்கத்தை தந்துள்ளது. இந்த ஆத்திரத்தில் சூட்டோடு சூட்டாக அறிக்கை விட்டு, செல்லதுரையை கட்சியை விட்டும் நீக்கி உள்ளது.

 முதல் குறி

முதல் குறி

சில தினங்களுக்கு முன்பு, செந்தில்பாலாஜியை கொரோனா தடுப்பு பணியில் சேலம் மாவட்ட பொறுப்பாளராக ஸ்டாலின் நியமித்திருந்தார்.. தொற்று தடுப்பு ஒருபக்கம் நடந்தாலும், உள்ளுக்குள் இந்த ஆபரேஷனையும் சேர்த்து நடத்தி முடித்துள்ளார் செந்தில்பாலாஜி.. முதல் குறியே செல்லதுரைதானாம்.. இதுபோக மேலும் சிலர் அதே கொங்குவில் இருந்து, அதே செந்தில்பாலாஜி மூலம் விரைவில் இணைய போகிறார்களாம்..

 அதிமுக

அதிமுக

அதாவது, சேலம் தொகுதியை நன்கு அறிந்தவர் செந்தில்பாலாஜி.. அந்த வகையில் அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.. அதிமுக மட்டுமில்லை.. பாமக எம்எல்ஏக்களுடனும் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று செந்தில்பாலாஜியே விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படியே கூட்டமும் நடத்தப்பட்டது.

 முயற்சி

முயற்சி

அப்போது பாமக எம்எல்ஏக்களிடமும், அதிமுக எம்எல்ஏக்களிடமும், கொரோனா நடவடிக்கைகள் குறித்து பேசினாலும், அப்படியே அவர்களை ஆளும் தரப்புக்கு சாதகமாக மாற்றும் முயற்சியையும் செந்தில் பாலாஜி கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. ஒருவேளை இது உண்மையானால், அதிமுக கூட்டணியின் பலம் சட்டசபையிலும் குறைய வாய்ப்புள்ளது.

கலக்கம்

கலக்கம்

ஏற்கனவே, ஒருபக்கம் சசிகலாவின் ஆதரவாளர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல், எடப்பாடி பழனிசாமி அதுகுறித்த வாய்மொழி உத்தரவு போட்டுள்ள நிலையில், இன்னொரு பக்கம் திமுக யார் யாருக்கெல்லாம் கொக்கி போடுகிறது என்பதை கண்காணிக்க முடியாமல் திணறல் ஏற்பட்டுளள்து.. ஆக மொத்தம் சசிகலா பக்கமும், ஸ்டாலின் பக்கமும் தினமும் அதிமுக நிர்வாகிகள் இணைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... அதிமுகவின் கொங்கு கரைந்து கொண்டுதான் இருக்கிறது..!

English summary
How Salem ADMK Executive joined in DMK, whats Minister Senthil Balajis next plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X