சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்பிஐ ஏடிஎம்மில் சூப்பர் பாதுகாப்பு வசதி.. டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு இல்லாமலும் பணத்தை எடுக்கும வசதியை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க எஸ்பிஐ யின் யோனோ ஆப் அவர்களின் மொபைலில் இருப்பது அவசியம் ஆகும்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் ஏடிஎம்மிலிருந்து பணத்தை எப்படி எடுப்பது என்பதை இப்போது பார்ப்போம்

1) யோனோ (YONO.) என்ற ஆப்பை உங்கள் மொபைல் டவுன்லோடு செய்யுங்கள்.

2) பரிவர்த்தனையைத் தொடங்க, 'யோனோ கேஷ் ஆப்சனுக்கு ' ( 'YONO cash option') க்கு செல்லுங்கள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு... அரசுக்கு உள்நோக்கம் உள்ளது.. ஈஸ்வரன் பரபரப்பு புகார்விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு... அரசுக்கு உள்நோக்கம் உள்ளது.. ஈஸ்வரன் பரபரப்பு புகார்

பணத்தை பதிவிடுங்கள்

பணத்தை பதிவிடுங்கள்

3) பின்னர் ஏடிஎம் செக்சனுக்கு (ATM section) சென்று நீங்கள் ஏடிஎம்மில் இருந்து எடுக்க விரும்பும் தொகையை உள்ளிடவும்.

4) எஸ்பிஐ உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு யோனோ ரொக்க பரிவர்த்தனை எண்ணை (Yono Cash transaction number) அனுப்பும்.

5) பின்னர் எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் இந்த எண்ணைப் பயன்படுத்தி, டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்காக அவர் அமைத்த பின்னையும் கொண்டு பணத்தை ஏடிஎம்களில் எடுக்கலாம்

4 மணி நேரம் அவகாசம்

4 மணி நேரம் அவகாசம்

6) ஒரு முறை யோனோ ரொக்க பரிவர்த்தனை எண் உருவாக்கின் அது நான்கு மணி நேரம் செல்லுபடியாகும்.

7) எனவே எஸ்பிஐ ஏடிஎம் சென்று ஏடிஎம் திரையில் 'யோனோ கேஷ்' ( YONO cash ) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

8) யோனோ பண பரிவர்த்தனை எண்ணை உள்ளிடவும்

9) யோனோ ரொக்க பின்னை உள்ளிட்டு சரிபாருஙங்கள்

10) பரிவர்த்தனைக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்துவிடும் உங்கள் பணத்தை வழக்கம் போல் எடுத்துக்கொள்ளலாம்

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

மற்ற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க இந்த வசதியைப் பயன்படுத்த முடியுமா?

எஸ்பிஐ அட்டை இல்லாத பணத்தை திரும்பப் பெறும் வசதி எஸ்பிஐ ஏடிஎம்களில் மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். இந்த வசதி ஏடிஎம்களில் மோசடிகளையும் டெபிட் கார்டுகளின் குறைக்கவே பயன்படுத்த அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    வங்கி கடன்களை அடைக்க உதவி... மக்களுக்கு உதவிய மர்ம மனிதன்
    பண வரம்பு

    பண வரம்பு

    பணத்தை திரும்பப் பெறும் வரம்பு

    எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனையில் குறைந்தபட்சம் ₹ 500 மற்றும் அதிகபட்சம் ₹ 10,000 பணத்தை ஏடிஎம்களில் பெறலாம்.

    ஏடிஎம்மில் பரிவர்த்தனை தோல்வியுற்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

    சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ஏடிஎம்மில் பரிவர்த்தனை தோல்வியுறும் போது, உங்கள் கணக்கிலிருந்து தொகை கழிக்கப்படுவதால், நீங்கள் பணத்தை எடுக்க முடியவில்லை என்றால், பீதி அடைய தேவையில்லை. உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும். ஏழு வேலை நாட்களுக்குள் இந்த தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    English summary
    State Bank of India (SBI) offers cardless cash withdrawal facility to its customers. Here’s how SBI customers can withdraw cash from ATM without using their debit cards.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X