சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவங்க எல்லாம் பெரிய டீமா?.. சொல்லி அடித்து வென்ற கத்துக்குட்டி டீம்.. உலக கோப்பை டி 20 செம தொடக்கம்!

Google Oneindia Tamil News

சென்னை: உலகக் கோப்பை டி 20 தொடர் நேற்று தொடங்கியது. ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த நாளே டி 20 உலகக் கோப்பை தொடங்கி உள்ளது. தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

ஓமான் பப்புவா நியூ கினியா ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையில் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினியா 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய ஓமான் 13.4 ஓவரில் 131 ரன்கள் எடுத்து வென்றது. இந்த போட்டிக்கு அடுத்து நடந்த வங்கதேச மேட்ச்தான் மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

சிஎஸ்கே வீரருக்கு செம லக்.. இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் பெரிய மாற்றம்.. ஆல் ரவுண்டருக்கு செக்சிஎஸ்கே வீரருக்கு செம லக்.. இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் பெரிய மாற்றம்.. ஆல் ரவுண்டருக்கு செக்

வங்கதேசம்

வங்கதேசம்

இந்த தொடரின் இரண்டாவது ஆட்டமாக நேற்று வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 ஆட்டம் நடைபெற்றது. வங்கதேசம் கடந்த 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் முன்னேறி உள்ளதால் கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக வங்கதேச அணியில் சில சர்வதேச தரத்திலான வீரர்கள் இருக்கிறார்கள். ஷாகிப், முஸ்தபிசர் போன்ற நல்ல வீரர்கள் உள்ளனர்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவமும் இவர்களுக்கு இருப்பதால் வங்கதேசம் நேற்று ஸ்காட்லாந்தை எளிதாக வீழ்த்தும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் நேற்று ஸ்காட்லாந்து கோச் ஷேன் பர்கர் மட்டும் வங்கதேச அணியை நாங்கள் எளிதாக வென்றுவிடுவோம் என்று கூறி இருந்தார். அவர் அளித்த பேட்டியில், வங்கதேசம் எங்களை பொறுத்தவரை பெரிய அணி கிடையாது.

பெரிய அணி

பெரிய அணி

வங்கதேசத்தை நாங்கள் பெரிய அணியாக நினைக்கவில்லை. ஓமான், பப்புவா நியூ கினியா அணியை எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் நாங்கள் வங்கதேசத்தை பார்க்கிறோம். எங்கள் குழுவில் இருக்கும் எல்லா அணிகளும் எங்களுக்கு ஒரே அளவிலான திறமை கொண்ட அணிகள்தான். எல்லோரிடமும் நாங்கள் முழு திட்டமிடலுடன்தான் ஆடுவோம் என்று கூறி இருந்தார். அதாவது வங்கதேசம் எங்களை பொறுத்தவரை பெரிய அணி கிடையாது. ஓமான், பப்புவா நியூ கினியா போலத்தான் வங்கதேசமும் எங்களுக்கு என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Recommended Video

    ICC T20 World Cup- Virat Kohli Has His Say On Ind Vs Pak Cricket Rivalry | Oneindia Tamil
    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இவரின் பேட்டியை வங்கதேச ரசிகர்கள் விமர்சனம் செய்து இருந்தனர். பொதுவாகவே வங்கதேச ரசிகர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமான ரசிகர்கள். மற்ற அணிகளை மோசமாக விமர்சனம் செய்யும் பழக்கம் அந்த அணி ரசிகர்களுக்கும், அந்த அணியின் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் உண்டு. இதனால் ஸ்காட்லாந்து அணியையும்.. நீ கிரவுண்டுக்கு வா... பார்ப்போம் என்பது போல வங்கதேச ரசிகர்கள் வம்பிழுத்து இருந்தனர்.

     என்ன நடந்தது

    என்ன நடந்தது

    அதேபோல் நேற்று ஆட்டத்திலும் முதலில் பேட்டிங் இறங்கிய ஸ்காட்லாந்து அணி வெறும் 11.4 ஓவரில் 53 ரன்கள் மட்டுமே எடுத்து 6 இழந்து திணறி வந்தது. இதனால் அவ்வளவுதான் ஸ்காட்லாந்து கதை முடிந்தது.. விரைவில் வங்கதேசத்தின் நாகினி டான்சை களத்தில் பார்க்கலாம் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் அதன்பின் களத்தில் நடந்ததுதான் ட்விஸ்ட். ஸ்காட்லாந்து அணிக்கு களமிறங்கிய க்ரிஸ் கிரேவஸ் கடைசி நேரத்தில் பினிஷர் போல ஆடி வெறும் 28 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம்.

    மார்க் வாட்

    மார்க் வாட்

    இன்னொரு பக்கம் மார்க் வாட் 17 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். இதனால் சரிவில் இருந்த ஸ்காட்லாந்து அணி 140 ரன்கள் எடுத்தது. இதன் பின் களமிறங்கிய வங்கதேசத்தின் டாப் ஸ்காட்லாந்தின் வீல்ஸ் போட்ட சரமாரி யார்க்கர், பவுன்சர் பவுலிங்கில் அடுத்தடுத்து சுருண்டது. 140 ரன்களை கூட எடுக்க முடியாமல் வங்கதேசம் படாதபாடு பட்டுவிட்டது. ஸ்காட்லாந்து அணியில் வெறும் 24 ரன்கள் மட்டுமே கொடுத்த வீல்ஸ் 3 விக்கெட் எடுத்தார். லிட்டான் தாஸ், சவுமியா சர்க்கார் இருவருமே தலா 5 ரன்களுக்கு வங்கதேச அணியில் அவுட் ஆனார்கள்.

    முஷ்பிகர் ரஹீம்

    முஷ்பிகர் ரஹீம்

    முஷ்பிகர் ரஹீம் மட்டும் 38 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் அந்த அணியில் சரியாக ஆடவில்லை. இதனால் 20 ஓவரில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேசம் அணி ஸ்காட்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அவங்க எல்லாம் பெரிய டீமா என்று ஸ்காட்லாந்து கோச் சொன்னது போலவே அதிரடியாக ஆடி வங்கதேசத்தை ஸ்காட்லாந்து வீழ்த்தி உள்ளது. முதல் நாள் ஆட்டத்திலேயே இவ்வளவு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளதால் இந்த சீசன் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    How Scotland wins the match against Bangladesh in T20 World Cup 2021 yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X