• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"சீக்ரெட்".. இதான் சீமான்.. மாயமில்ல, மந்திரமில்ல.. அதிமுகவை கதற விட்டு.. டாப் கியர் போட்டு.. செம!

|

சென்னை: "அட ஆச்சரியமா இருக்கே.. சீமான் எப்படி 3வது இடத்துக்கு வந்தார்? நம்பவே முடியலையே" என்ற வியப்பு கேள்விகள் இந்த 4 நாட்களாகவே அரசியல் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.. மாயம் இல்லை.. மந்திரம் இல்லை.. நாம் தமிழர் எப்படி 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது என்பதற்கான வாக்கு வங்கி சதவீதம் தொகுதி வாரியாக வெளிவந்துள்ளது.

  தனி சக்தியாக உருவெடுக்கிறாரா Seeman? - அசர வைக்கும் Report | Oneindia Tamil

  இந்த தேர்தலிலாவது சீமான் கூட்டணி வைப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.. கமலுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது.. ஆனால் சீமான்தான் மறுத்து விட்டார்.. வழக்கம்போலவே சிங்கம் சிங்கிளாகவே களம் இறங்கும் என்று அறிவித்தார்.

  இதுவரை வந்த கருத்து கணிப்புகளில் அனைவருமே சொல்லி வைத்தது போல ஒரே கருத்தை சொன்னார்கள்.. இந்த முறை நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய ஓட்டுக்களை பிரிக்கும் என்றார்கள்.. அதன்படியே எல்லா தொகுதிகளிலும், கணிசமான ஓட்டுகளை பெற்றுள்ளது... அதாவது மொத்தம், 30 லட்சத்து, 43 ஆயிரத்து, 657 ஓட்டுகளை பெற்றுள்ளது.. இந்த தமிழ்நாடு என்ற மாநிலத்தின் 3வது பெரிய கட்சியாகவும் உருவெடுத்து உள்ளது.

  மகாராஷ்டிரா: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்மகாராஷ்டிரா: மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

   சென்னை

  சென்னை

  கடந்த எம்பி தேர்தலைவிட 13.79 லட்சம் ஓட்டுகளை ஜாஸ்தி பெற்றுள்ளது இந்த கட்சி.. சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட, சீமான் 48 ஆயிரத்து, 597 ஓட்டுகளை பெற்றார்... அவரது கட்சியின் வேட்பாளர்கள், ஆவடி, சோழிங்கநல்லுார், துாத்துக்குடி தொகுதிகளில், 30 ஆயிரம் ஓட்டுக்கு மேல் பெற்றுள்ளனர்.

   தொகுதி

  தொகுதி

  செங்கல்பட்டு, மாதவரம், பூந்தமல்லி, திருவாரூர் தொகுதிகளில், 25 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.,. 14 தொகுதிகளில், 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு அதிகமாகவும், 36 தொகுதிகளில், 15 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேலாகவும், 106 தொகுதிகளில், 10 ஆயிரம் ஓட்டுக்கு கூடுதலாகவும் பெற்றுள்ளனர்... இதுதான் சீமான் கட்சி 3வது இடத்துக்கு வர காரணம்.. இந்த ஓட்டுகள் தான் அதிமுகவின் வெற்றியை பாதிக்கவும் பிரதான காரணம்.

  உதாரணம்

  உதாரணம்

  இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது என்றால், முறையான கட்டமைப்பை ஏற்படுத்தினால், எந்த கட்சியாக இருந்தாலும் டாப் கியர் போட்டு மேலே வரும் என்பதற்கு உதாரணம்தான் நாம் தமிழர் கட்சி.. இது இந்த தேர்தலில் மட்டுமல்ல, கடந்த தேர்தலிலும் சீமான் இதை செய்திருந்தார்.. ஆனால், அதை சரியாக பலரும் உற்றுப்பார்க்க தவறிவிட்டனர்.. மேலும் சீமானின் பேச்சுக்களே சோஷியல் மீடியாவில் நம்பர் 1 இடத்தில் இருந்ததாலும், டிடிவி தினகரன் 3வது இடத்துக்கு வந்துவிட்டதாலும், நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் அவ்வளவாக பேசப்படவில்லை.

   பிரதானம்

  பிரதானம்

  இந்த முறைகூட பல அரசியல் நுணுக்கங்களை புகுத்தி உள்ளார் சீமான்.. சசிகலாவை சென்று சந்தித்ததன் விளைவு, முக்குலத்தோர் வாக்குகளை தெற்கில் பிரதானமாக கொக்கி போட்டு இழுத்துள்ளார்.. தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு பல இடங்களில் குடைச்சலையும் தந்துள்ளார்.. அதேபோல, நாங்குநேரி ராதாபுரம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்திய புதுமையையும் இந்த முறை சீமான் கையாண்டுள்ளதால், கமலை இந்த விஷயத்தில் ஓவர்டேக் செய்துவிட்டதாகவே பார்க்கப்பட்டு வருகிறது...

  போட்டி

  போட்டி

  ஆனால் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் நிற்காமல், கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிட்டிருந்தால், கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.. அதாவது ஸ்டாலின் Vs சீமான் என்ற ரேஞ்சுக்கு களம் மாறுபட்டிருக்கும்.. அது நாம் தமிழருக்கு கூடுதல் வலிமையை பெற்று தந்திருக்கும்..

  அதிமுக

  அதிமுக

  அதேசமயம், அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக தனித்து நின்று மொத்த தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் துணிச்சல் சீமானுக்கு மட்டுமே பொருந்தும்.. முக்கியமான தொகுதிகளில், யாருமே எதிர்பாராத வகையில் ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை களம் இறக்கியது போன்ற வித்தியாசமான, முயற்சியையும் மேற்கொள்ள சீமானுக்கு மட்டுமே தைரியம் வரும்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களுடன் என்றுமே இணைந்து தோள் கொடுக்கும் சீமானின் தம்பிகளின் பங்கு அபரிமிதமானது..!

   சபாஷ்

  சபாஷ்

  எனினும் ஒரு விஷயத்தை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. ஓட்டுக்கு காசு என்ற பழைய மக்கிப்போன விஷயத்தை தூக்கி குப்பையில் எறிந்துள்ளார் சீமான்.. இனி காசு வாங்காமல் ஓட்டுப்போடும் நிலை தமிழகத்தில் உருவானால், அதற்கான சத்தான விதையை ஆழமாக விதைத்த பெருமை சாட்சாத் நம் சீமானையே போய் சேரும்..!

  English summary
  How Seemans Naam Tamilar Party took 3rd place in Tamil Nadu
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X