சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் ஆட்டத்தை மாற்றும்... தமிழக அரசியலை புரட்டி போடும் "ஸ்விங்-வாக்குகள்".. பரபர சர்வே பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஸ்விங் ஓட்டுகள்தான் முடிவை தீர்மானிக்கும் வாக்குகளாக மாறும் என்கிறார்கள். அதாவது திமுக, அதிமுகவிற்கு எப்போதும் வாக்களிக்கும் மக்கள் இந்த முறை மாற்றி வாக்களிக்க வாய்ப்புகள் உள்ளது.. டைம்ஸ் நவ்- சிவோட்டர் சர்வே நேற்று வெளியிட்ட கருத்து கணிப்பில் இந்த விவரங்கள் அடங்கி உள்ளன!

5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டைம்ஸ் நவ்- சிவோட்டர் சார்பாக நேற்று தேர்தல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. 5 மாநிலங்களில் எந்த கட்சிகள் ஆட்சியை பிடிக்கும், எந்த முதல்வர் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணிப்புகளை வெளியிட்டு இருந்தது.

டைம்ஸ் நவ்- சிவோட்டர் சர்வே கருத்து கணிப்பின்படி சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், அதிமுக அணிக்கு 65 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

திமுக கூட்டணி இந்தமுறை இமாலய வெற்றியை பெறும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவார் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அதிமுக தனது வாக்கு வங்கியை இழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது . அதிமுக- பாஜக அணிக்கு 32.1% வாக்குகள் கிடைக்கும் என்று டைம்ஸ்நவ் சர்வே கூறுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 43.7% வாக்குகள் பெற்றிருந்தது

திமுக

திமுக

திமுக தலைமையிலான கூட்டணிக்கு 43.2% வாக்குகள் கிடைக்கும் என்று இதில் கூறப்பட்டுள்ளது . 2016 தேர்தலில் திமுக கூட்டணி 39.4% வாக்குகள் பெற்றது. அதன்படி அதிமுக கூட்டணிக்கு கடந்த வருடம் சென்று வாக்குகளில் கிட்டதட்ட 11% வாக்குகளை இழக்கிறது. அதேபோல் திமுக சென்ற தேர்தலை விட 6% வாக்குகளை கூடுதலாக பெறுகிறது. அதிமுக இழக்கும் மீதம் உள்ள 5% வாக்குகள் அமமுக, மநீம போன்ற கட்சிகளுக்கு செல்கிறது.

ஸ்விங்

ஸ்விங்

ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கும் இந்த 11% வாக்குகள்தான் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - திமுகவின் வெற்றியை நிர்ணயம் செய்யும். இந்த 11% வாக்குகளை மீண்டும் பெற்றால் அதிமுகவே கவலையின்றி வென்றுவிடும். இவர்களை கவரும் வகையில் அதிமுக செயல்பட வேண்டும். இதில் 5-6%க்கு மேல் பெற்றாலே அது திமுகவிற்கு சாதகமாக சென்றுவிடும். பொதுவாக 1% வாக்காளர்கள் ஸ்விங் ஆனால் 4-5 தொகுதிகளின் முடிவில் மாற்றம் வரும்.

மாற்றம்

மாற்றம்

அப்படி இருக்கும் பட்சத்தில் 11%ஸ்விங் என்பது 45-50 இடங்களின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த 11% வாக்குகளில் 5% மட்டுமே திமுகவிற்கு செல்கிறது. திமுகவிற்கு ஒரு பக்கம் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சர்வே சொன்னாலும் இன்னொரு பக்கம் அதிமுகவிற்கு வாய்ப்பு இருப்பதாகவே கருத வேண்டும். 11% வாக்குகளை மொத்தமாக இழக்காமல் இழுத்து பிடித்தால் அதிமுக தனது சொந்த வாக்குகளை தக்க வைக்க முடியும்.

வாக்குகள்

வாக்குகள்

இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் உள்ளது. திமுக, அதிமுகவின் தேர்தல் அறிக்கையே இனிதான் வெளியாகும்.11% வாக்குகள் தேர்தலுக்கு முன் எந்த பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம். முறையாக திட்டங்களை வகுத்தால் மொத்தமாக 11% வாக்குகளையும் திமுக அல்லது அதிமுக அள்ள முடியும்.

ஸ்விங் ஆகும்

ஸ்விங் ஆகும்

வாக்குகள் ஸ்விங் ஆகி ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் செல்வதே பொதுவாக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும். தமிழகத்திலும் இந்த தேர்தலில் அதேபோல் வாக்குகள் ஸ்விங் ஆக வாய்ப்புள்ளது. இதை திமுக, அதிமுக இரண்டும் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள போகிறது என்பதுதான் தேர்தல் முடிவை தீர்மானிக்கும்.

English summary
How swing votes will change the election results in Tamilnadu? - Times now and C voter survey
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X