• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி? சபாஷ் போட வைக்கும் தமிழக அரசின் ஆக்ஷன்!

|

சென்னை: தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளன.

வாகனங்களை இயக்கும் போது, டிரைவர்கள் ஃபோன் பேசியதால் 2016 முதல் 1.26 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல், டிரைவர்கள் விதிமுறைகளை மீறியதால் 50,000 டிரைவிங் லைசன்ஸ் சஸ்பெண்ட் அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போதே சாலையை கடந்ததற்காகவும் கிட்டத்தட்ட 50,000 டிரைவிங் லைசன்ஸ் ரத்தாகி இருக்கிறது.மேலும், ஆறு பொதுவான போக்குவரத்து மீறல்களுக்காக 3.3 லட்சம் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.

How Tamil Nadu reduced road accidents and deaths

படிக்கும் போது நீங்களே டயர்டாகிட்டீங்கள்ல... அவ்வளவு சாலை விதிமுறை மீறல்கள் நாட்டில் நடக்குது. அதோடு சின்ன சாம்பிள் தான் இந்த புள்ளிவிவரம்.

விபத்துகள் ஏற்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஆம்புலன்ஸ்கள், போலீஸ் ரோந்து வாகனங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க, விபத்துக்கள் குறித்த நிகழ்நேர தரவுகளை தகவல் தொழில்நுட்பத் துறை சேகரிக்கிறது.

2018-ம் ஆண்டில் மட்டும் நெடுஞ்சாலைகளில் 2,000 ஒயின் மற்றும் பீர் கடைகள் மூடப்பட்டுள்ளன.

சாலை பாதுகாப்பு தொடர்பான சிறப்பான பணிகளில் ஈடுபடும் கள அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. பள்ளிப் பாடத்திட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 7,870 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு திட்டங்கள் கிளப்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

ஹெல்மெட் அணியாமல் ஒய்யாரமாக வரும் டூ-வீலர் நண்பர்களுக்கு, பிடிபடும் இடங்களின் அருகில் உள்ள காவல் நிலையம் மூலம் விழிப்புணர்வு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு முதல் சாலை பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் நடைமுறைப்படுத்திய நடவடிக்கைகளில் இவை.

என்ன கொடுமை சரவணன் இது.. .அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்ட மனிதர்!என்ன கொடுமை சரவணன் இது.. .அமேசானில் வரட்டி வாங்கி சாப்பிட்ட மனிதர்!

இதனால், தமிழகத்தில் 38% சாலை விபத்துகளும், 54% விபத்துகளால் ஏற்படும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, சாலை பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் மத்திய அரசின் விருதை வெல்ல, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அனைத்து மாநிலங்களும் "தமிழக மாதிரியை" பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சுமார் இரண்டு கோடி ஓட்டுநர் உரிமங்களுடன், மூன்று கோடிக்கு மேல் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் 66,000 கி.மீ கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சாலை நெட்வொர்க்குகளில் ஒன்றான தமிழகம், வருடாந்திர சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் பொதுவாக முன்னிலையில் இருக்கும்.

2019 இல் மொத்த சாலை விபத்து இறப்புகளில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது , இந்தியாவில் நடந்த அனைத்து சாலை விபத்துக்களிலும் சுமார் 13.7 சதவிகிதமும், சாலை இறப்புகளில் 11 சதவிகிதமும் தமிழகத்தில் பதிவானவை. இருப்பினும், தற்போது விபத்து விகிதம் குறைந்திருக்கிறது.

"அடுத்த இலக்கு நோ டெத். நாங்கள் எந்த தேதியையும் இலக்காக நிர்ணயிக்கவில்லை, ஆனால் அதனை சாதித்துக் காட்ட தீவிரமாக பணியாற்றி வருகிறோம், "என்கிறார் தமிழ்நாட்டின் கூடுதல் போக்குவரத்து ஆணையர் எம்.மனகுமார்.

தமிழக அரசின் வெற்றிகரமான நடவடிக்கைகளில் ஒன்று, ஒவ்வொரு 50 கி.மீ தூரத்திலும் ஆம்புலன்ஸ் மற்றும் ரோந்து வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தது தான். இதனால் தான் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், காயமடைந்தவர்கள் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டுச் சேர்க்கப்பட்டு, உயிர் காப்பாற்றப்பட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான 15,000 பேரில் 76% பேர் ஆம்புலன்ஸ் அல்லாமல் ரோந்து வாகனங்கள் மூலம் மருத்துவமனை கொண்டுச் சென்று காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். தமிழகம் ஆண்டுதோறும் சராசரியாக 82,000 மோசமான விபத்துகளை சந்தித்து வந்தது. ஆனால், 2020 நவம்பர் தரவுகளின் படி, இந்த எண்ணிக்கை வெறும் 3,205 ஆக குறைந்துள்ளது.

மற்ற மாநிலங்கள் விபத்தின் எண்ணிக்கையை குறைக்க போராடி வரும் நிலையில், தமிழகம் அதில் தனித்து நிற்பது நமக்கு பெருமையோ இல்லையோ, உயிருக்கு ஏற்படும் சேதாரம் குறைவதில் நிம்மதியடையலாம்.

English summary
TN reduced road accidents: Check How Tamil Nadu State Reduced Road accidents and Deaths ? தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்தது எப்படி? சபாஷ் போட வைக்கும் தமிழக அரசின் ஆக்ஷன் என்ன என்பதை இந்த பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X